IPL 2023 : சி.எஸ்.கே அணிக்கு இப்படி ஒரு வீரர் தேவையா? தோனி எப்படி இந்த தவறை ஒப்புக்கொண்டார் – ரசிகர்கள் கோபம்

CSK Ms DHoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது ஒரு மாதத்தை கடந்து மே மாதம் முதல் வாரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 46 போட்டிகள் முடிவடைந்த வேளையில் புள்ளி பட்டியலில் முன்னேற்றத்திற்கான ஒவ்வொரு அணியும் கடுமையான போட்டியை அளித்து வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இம்முறை சாம்பியன் பட்டத்தை நோக்கி மிக சிறப்பாக விளையாடி வருகிறது.

CSK vs KKR MS Dhoni Moeen Ali Sivam dube

- Advertisement -

இந்த நடப்பு ஆண்டிற்கான புள்ளி பட்டியல் குஜராத் அணி முதலிடத்திலும், லக்னோ இரண்டாவது இடத்திலும் இருக்கும் வேளையில், சிஎஸ்கே மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதுவரை சிஎஸ்கே அணி பங்கேற்ற 10 போட்டிகளில் ஐந்து வெற்றி மற்றும் நான்கு தோல்வி என பத்து புள்ளிகளையும் மழையின் காரணமாக நின்ற போட்டியால் ஒரு புள்ளி என 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் நேற்று மொஹாலியில் நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் மோதிய சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக நின்றதால் இரு அணிகளுக்குமே தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டதால் லக்னோ அணி இரண்டாம் இடத்திலும், சென்னை அணி மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் இந்த போட்டி நடைபெற்றிருந்தால் சென்னை அணி தான் வெற்றி பெற்றிருக்கும் என்ற நிலை இருந்தது.

theekshana

ஆனால் மழை காரணமாக தற்போது லக்னோ அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷானா மீது ரசிகர்கள் மிகப்பெரும் அளவில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஏனெனில் என்னதான் அவர் போட்டிக்கு போட்டி விக்கெட்டை எடுத்து இருந்தாலும் பவுலிங்கின் போது ரன்களை அதிகமாக விட்டுக் கொடுக்கிறார்.

- Advertisement -

அதோடு பீல்டிங்கில் மிகவும் மந்தமாக காணப்படுகிறார். கைக்கு வரும் எளிதான கேட்ச்கள் பலவற்றை கோட்டை விட்டுள்ளார். பீல்டிங்கின் போது மிகவும் மெதுவாக ஓடுகிறார். இப்படி அவரது குறைபாடுகள் பீல்டிங்கில் வெளிப்படையாகவே தெரியவே ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் தோனி எப்பொழுதுமே எவ்வளவு பெரிய வீரர்களாக இருந்தாலும் ஃபீல்டிங்கில் மெத்தனம் காட்டினால் அவர்கள் மீது கோபம் கொண்டு அணியிலிருந்து வெளியேற்றி விடுவார்.

இதையும் படிங்க : IPL 2023 : இவங்களால் குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுறாங்க, பிசிசிஐ அதை செய்யணும் – கோலி, கம்பீரை விளாசிய முன்னாள் வீரர்

ஆனால் தீக்ஷனாவை மட்டும் ஏன் அவர் செய்யும் தவறை பொறுத்துக் கொண்டு அணியில் வைத்திருக்கிறார் என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். மேலும் தீக்சனாவை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக நல்ல சுழற்பந்து வீச்சாளர் மற்றும் பீல்டரான மிட்சல் சான்ட்னரை தொடர்ந்து ஆட வைக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement