IPL 2023 : இவங்களால் குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுறாங்க, பிசிசிஐ அதை செய்யணும் – கோலி, கம்பீரை விளாசிய முன்னாள் வீரர்

Virat Kohli Gambhir.jpeg
Advertisement

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி தேதி நடைபெற்ற 43வது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. ஆனால் அந்த அப்போட்டியில் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் இளம் வீரர் நவீன்-உல்-ஹக் வெள்ளை கோட்டுக்கு உள்ளே வந்தும் தேவையின்றி முகமது சிராஜ் கோபத்துடன் ரன் அவுட் செய்ய முயற்சித்தார். அதனால் அதிருப்தியில் இருந்த நவீனுக்கும் அருகில் நின்று கொண்டிருந்த விராட் கோலிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை அமித் மிஸ்ரா மற்றும் நடுவர் ஆகியோர் தடுத்து நிறுத்தினர்.

Naveen Ul Haq Fight

அதன் பின் போட்டியின் முடிவில் இரு அணி வீரர்கள் வழக்கம் போல கை கொடுத்துக் கொண்ட போது மீண்டும் அவர்களிடையே ஏற்பட்ட மோதலை கிளன் மேக்ஸ்வெல் பெரிதாக விடாமல் நிறுத்தினார். அவை அனைத்தையும் பெவிலியினில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்து சண்டையை விலக்காமல் முதல் ஆளாக தனது ஸ்டைலில் விராட் கோலியுடன் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

அப்போவே தடை பண்ணிருக்கணும்:
இத்தனைக்கும் ஒரே மாநிலத்தில் பிறந்து இந்தியாவுக்காக விளையாடிய இவர்களில் 2013இல் கொல்கத்தாவின் கேப்டனாக விராட் கோலியுடன் சண்டை போட்ட கம்பீர் 10 வருடங்கள் கழித்தும் பகை மாறாமல் மோதி வருவது ரசிகர்களுடைய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆனால் 17 கோடிகளை சம்பளமாக வாங்கும் விராட் கோலிக்கு அவ்வளவு பெரிய சண்டைக்கு தண்டனையாக இறுதியில் அப்போட்டியின் 100% சம்பளமான சுமார் 1 கோடி மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் இது போன்ற சண்டை நடைபெறாமல் இருப்பதற்கு அபராதம் போதாது ஒரு சில போட்டிகள் தடை விதிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

Gambhir Virat Kohli

இந்நிலையில் 2018 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸை பிரபல இந்தி கெட்ட வார்த்தையால் நேரலையில் விராட் கோலி திட்டியது இப்போதும் பிரபலமாக இருந்து வருகிறது. ஆனால் விராட் கோலி பேசியதால் அதை தம்முடைய குழந்தைகள் எளிதாக கற்றுக் கொண்டதாக தெரிவிக்க முன்னாள் வீரர் சேவாக் தனது அணி வீரர்களை உள்ளே அழைத்த ரிசப் பண்ட், களத்திற்கு சென்று அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி என சமீப காலங்களாகவே நட்சத்திர வீரர்கள் இப்படி அத்து மீறி நடந்து கொள்வது சர்வ சாதாரணமாகி விட்டதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

எனவே இதற்கு அபராதம் எந்த வகையிலும் தீர்வாகாது என்று தெரிவிக்கும் அவர் இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பிசிசிஐ சில போட்டிகள் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்போட்டி முடிந்ததும் நான் தொலைக்காட்சியை அணைத்து விட்டதால் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. அடுத்த நாள் காலை சமூக வலைதளங்களில் பார்த்து தான் அவற்றை தெரிந்து கொண்டேன். அந்த தருணத்தில் நிகழ்ந்தது நிச்சயமாக சரியல்ல. எந்த போட்டியாக இருந்தாலும் தோற்றவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு வெற்றியாளர் கொண்டாடுவதற்கு வழி விட வேண்டும்”

“அதை விட்டுவிட்டு ஏன் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறீர்கள். அதை விட நட்சத்திரங்களாக இருக்கும் நீங்கள் இவ்வாறு பேசுவதை குழந்தைகள் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக எங்களுடைய நட்சத்திரங்கள் இவ்வாறு பேசியதால் நாங்களும் அவ்வாறு பேசுகிறோம் என்று குழந்தைகள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுவெளியில் வரம்புடன் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். என்னைக் கேட்டால் இதற்கு பிசிசிஐ தடை விதித்தால் தான் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி அல்லாமல் அரிதாக நடக்கும். ஏனெனில் இது போன்ற நிகழ்வுகள் சமீப காலங்களில் அடிக்கடி நடந்துள்ளன”

இதையும் படிங்க:MI vs PBKS : இப்படி விளையாடுற ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடிக்கும் – சூரியகுமார் யாதவ் பேட்டி

“பென் ஸ்டோக்ஸ் பற்றிய உங்களுடைய கெட்ட வார்த்தைகளை என்னுடைய குழந்தைகள் உங்களின் உதட்டின் அசைவுகளை வைத்தே புரிந்து கொள்கின்றனர். என்னுடைய குழந்தைகள் படிக்கும் அதை நாளை அனைவரும் படிக்கலாம். எனவே அது தொடர வேண்டுமெனில் நீங்களும் தொடர்ந்து இப்படி நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.

Advertisement