MI vs PBKS : இப்படி விளையாடுற ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடிக்கும் – சூரியகுமார் யாதவ் பேட்டி

Suryakumar-Yadav
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 46-வது ஐபிஎல் லீக் போட்டியானது நேற்று மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை வெற்றிகரமாக துரத்திய மும்பை அணியானது 216 ரன்களை அடித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்யது.

Tilak Varma and Tim David

- Advertisement -

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் சார்பாக லியாம் லிவிங்ஸ்டன் 82 ரன்களையும், ஜித்தேஷ் சர்மா 49 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியானது முதல் ஓவரிலேயே ரோஹித்தின் விக்கெட்டை பறிகொடுத்தது.

அதன் பிறகு ஆறாவது ஓவரில் கேமரூன் கிரீனையும் இழந்தது. எனவே இந்த போட்டியில் எப்படி மும்பை வெற்றி பெறப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இஷான் கிஷனுடன் கைகோர்த்த சூரியக்குமார் யாதவ் வந்த முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளை அடித்து விளையாட மூன்றாவது விக்கெட்க்கு அந்த இருவரது ஜோடி மிகவும் அதிரடியாக 116 ரன்கள் சேர்த்து அசத்தியது.

SKY and Ishan Kishan

இறுதியில் இஷான் கிஷன் 75 ரன்கள், சூர்யாகுமார் யாதவ் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் அவர்கள் விட்ட அதிரடியை பின்தொடர்ந்த டீம் டேவிட் (19) மற்றும் திலக் வர்மா (26) ஆகியோர் இன்னும் விரைவாக போட்டியை முடித்துக்கொடுத்தனர். இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 216 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற இந்த பிரமாதான வெற்றியை ருசித்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் விளையாடிய விதம் குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் கூறுகையில் : இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. ஆனால் நான் இந்த போட்டியை கடைசி வரை நின்று முடித்துக் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் பேட்டிங் செய்ய உள்ளே புகுந்த போது தெளிவான மனநிலையுடன் அடித்து ஆட வேண்டும் என்று நினைத்தேன்.

இப்படி இக்கட்டான கட்டத்தில் பேட்டிங் செய்யும் பயிற்சிகளை தான் நான் நிறைய வலைப்பயிற்சியில் செய்தும் பார்க்கிறேன். இஷான் கிஷான் ஏற்கனவே மிகச் சிறப்பாக விளையாடி கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து நானும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தேன். நான் உள்ளே சென்றதும் முதல் பந்தில் இருந்தே அடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் தான் இருந்தேன். அந்த வகையில் அவருடன் இணைந்து மிகச் சிறப்பாக பாட்னர்ஷிப் அமைத்தேன்.

இதையும் படிங்க : IPL 2023 : ஒரே ஊர்ல பிறந்து அடிச்சுக்கலாமா? 2 பேரையும் சமாதானம் செய்ய நான் தயார், கோலி – கம்பீருக்கு முன்னாள் வீரர் அழைப்பு

உண்மையிலேயே என்னுடைய ஸ்டைல் பவராக அடிப்பது கிடையாது. பந்தை நன்றாக டைமிங் செய்து விளையாடுவது மற்றும் மைதானத்தில் இருக்கும் ஃபீல்டுகளுக்கு இடையே விளையாட வேண்டும் என்பது மட்டும்தான். அந்த வகையில் வெற்றிக்கான பாட்னர்ஷிப் என்னிடம் இருந்து வந்ததில் மகிழ்ச்சி என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement