வீடியோ : ஹே எப்புட்றா என்று தமக்கு தாமே வியந்த ஸ்கை, காற்றில் பறந்து 2 அபார கேட்ச்கள் பிடித்த சூரியகுமார்

Suryakumar catch
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று உலகில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறிய இந்தியா அடுத்ததாக நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் போராடி வென்றது. குறிப்பாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நியூசிலாந்து பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கி 20 ஓவரில் 234/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இளம் வயதில் சதமடித்த இந்திய வீரராக சாதனை படைத்த சுப்மன் கில் 12 பவுண்டரி 7 சிக்ஸருடன் 126* (63) ரன்களும் ராகுல் திரிப்பாதி 44 (22) ரன்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 235 ரன்களை துரத்திய நியூசிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான வேகப்பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 12.1 ஓவரில் 66 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 35 (25) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்று தங்களை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபித்துள்ளது.

- Advertisement -

ஹே எப்புட்றா:
இந்த வெற்றிக்கு சதமடித்த சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதையும் தொடர் முழுவதும் அசத்திய ஹர்திக் பாண்டியா தொடர் நாயகன் விருதையும் வென்றனர். முன்னதாக இந்த போட்டியில் பிளாட்டாக இருந்த பிட்ச்சில் நியூசிலாந்து பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில் இந்திய பவுலர்கள் அந்த தவறை செய்யாமல் ஸ்விங் ஜாலத்தை நிகழ்த்தினார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் பவர் பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்த இந்திய வேகபந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே பின் ஆலன் 3, டேவோன் கான்வே 1, மார்க் சாப்மேன் 0, கிளன் பிலிப்ஸ் 2, மைக்கேல் பிரேஸ்வெல் 8 என முக்கிய வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்து மடக்கிப் பிடித்தனர்.

அதிலும் குறிப்பாக ஸ்விங் ஆவதை முதல் பந்திலேயே கணித்த கேப்டன் பாண்டியா முதல் ஓவரிலேயே 2வது ஸ்லிப் பகுதியில் சூரியகுமாரை நிறுத்தி வைத்து பந்து வீசினார். எதிர்பார்த்தது போலவே 4வது பந்தில் ஸ்விங் ஆகி வந்த பந்தை பவுண்டரி அடிக்க முயன்ற ஃபின் ஆலன் எட்ஜ் கொடுத்தார். அதை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சூரியகுமார் யாதவ் கண்ணிமைக்கும் நேரத்தில் கச்சிதமாக தாவி கேட்ச்சாக பிடித்தார். அதை விட மீண்டும் ஹர்திக் பாண்டியா வீசிய 3வது ஓவரின் 4வது பந்தை எதிர்கொண்ட கிளன் பிலிப்ஸ் எக்ஸ்ட்ரா பவுன்ஸாகி வந்த பந்தை பவுண்டரி அடிக்க முயற்சிதார்.

- Advertisement -

ஆனால் அதை கட்டுப்படுத்த முடியாமல் கிளன் பிலிப்ஸ் எட்ஜ் கொடுத்த பந்து எக்ஸ்ட்ரா பவுன்ஸாகி வந்த காரணத்தால் முன்பை விட அதிவேகத்தில் சற்று உயரமாக 2வது ஸ்லிப் பகுதியை நோக்கி சென்றது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சூரியகுமார் யாதவ் முன்பை விட அதிவேகத்தில் வந்த பந்தை சரியான நேரத்தில் பந்து வரும் வேகத்தை கணித்து கச்சிதமான டைமிங் கொடுத்து துல்லியமாக தாவிப்பிடித்தார். இம்முறை சற்று அதிகமாகவே காற்றில் பறந்து தாவி பிடித்த அவருடைய கேட்ச்சை பார்த்து வியந்த வர்ணையாளர்களைப் போலவே பாண்டியா உள்ளிட்ட இந்திய அணியினரும் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் வியந்து சூரியகுமார் யாதவை பாராட்டினார்கள்.

அந்த பாராட்டுக்கு பின் “நாமா இப்படி கேட்ச் பிடித்தோம்” என்ற ஆச்சரியத்துடன் தமக்குத் தானே வியந்த சூரியகுமார் யாதவ் ஒரு சில வினாடிகள் அதை எப்படி பிடித்தோம் என்று யோசித்து தமக்கு தாமே “ஹே எப்புட்றா” என்பதை போன்ற ரியாக்சனை முகத்தில் வெளிப்படுத்தினார். முன்னதாக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் இப்போட்டியில் பேட்டிங்கிலும் 24 (13) ரன்களை விளாசினார்.

இதையும் படிங்க: IND vs NZ : பேட்டிங், பந்து வீச்சில் அனலை தெறிக்க விட்ட இந்தியா, நியூஸிலாந்தை சுருட்டி உலக சாதனை வெற்றி பெற்றது எப்படி

ஆனால் பொதுவாகவே தம்முடைய பேட்டிங்கில் 360 டிகிரியில் கற்பனை செய்ய முடியாத ஷாட்களை அடித்து வெற்றிகளில் பங்காற்றக்கூடிய அவர் இப்போட்டியில் தன்னுடைய அபார பீல்டிங் செயல்பாடுகளால் இந்தியாவின் வெற்றியின் முக்கிய பங்காற்றியது குறிப்பிடப்பட்டது.

Advertisement