டிராவிடுக்கு பதிலாக இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வரப்போகும் முன்னாள் வீரர் – வந்தா செம மாஸ்தான்

Dravid
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறைவுக்கு வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் டிராவிட் எதிர்வரும் இந்த டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்து தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக உள்ளார்.

அதன் காரணமாக இந்திய அணிக்கான அடுத்த புதிய பயிற்சியாளரை தேடும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த புதிய பயிற்சியாளர் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளத்தில் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

மேலும் பிசிசியின் பொருளாளரான ஜெய்ஷா இந்த புதிய பயிற்சியாளர் தேர்தலில் தீவிரமாக இறங்கியுள்ள வேளையில் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் அடுத்த பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் பாஜக-வின் எம்.பி ஆக இருந்த கம்பீர் அண்மையில் அரசியலில் இருந்து விலகி முழு நேர கிரிக்கெட் தொடர்பான பணிகளை செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார். அவ்வேளையில் லக்னோ அணியின் மென்டராக இருந்த அவர் அந்த பதவியில் இருந்து விலகி தற்போது கொல்கத்தா அணியின் மென்டராக இருந்து வருகிறார்.

- Advertisement -

இவ்வேளையில் அடுத்த இந்திய அணியின் பயிற்சியாளருக்கான பதவிக்கு நிச்சயம் கம்பீர் விண்ணப்பிப்பார் என்று தெரிகிறது. ஒருவேளை கம்பீர் அப்படி விண்ணப்பிக்கும் பட்சத்தில் நேரடியாக அவர் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : எப்படி வரவேண்டிய பிளேயர் இப்படி ஆகிட்டியே.. முதலில் அதை நிறுத்து.. பிரித்திவி’க்கு வாசிம் அக்ரம் அட்வைஸ்

இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் தனது தலைமையிலும் சரி தற்போது மென்டராக இருக்கும் அணியிலும் சரி அவரது முடிவுகள் அதிரடியாகவும், அற்புதமாகவும் இருந்து என்பதனால் அவரது அனுபவத்தை இந்திய அணிக்குள் புகுத்த நிச்சயம் அவர் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement