ஃபுட் பால் போல சிபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கொடுக்கப்பட்ட சிவப்பு அட்டை – யாருக்கு, எதற்குன்னு தெரியுமா

Sunil Narine Pollard Red Card Umpire
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வரும் 2023 கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற 12வது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் மற்றும் த்ரிபங்கோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய செயின்ட் கிட்ஸ் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 178/5 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் செர்ஃபன் ரூத்தர்ஃபோர்ட் 62* (38) ரன்களும் ஆண்ட்ரூ ஃபிளட்சர் 32 (17) ரன்களும் எடுக்க நைட் ரைடர்ஸ் சார்பில் சுனில் நரேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 179 ரன்களை துரத்திய நைட் ரைடர்ஸ் அணிக்கு வால்டன் 6, மார்ட்டின் கப்டில் 7 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 61 (32) ரன்களும் லார்கன் டுக்கர் 36 (31) ரன்களும் எடுத்து சரிவை சரி செய்தனர்.

- Advertisement -

சிவப்பு அட்டை:
அதை வீணடிக்காத வகையில் கடைசியில் கேப்டன் பொல்லார்ட் முரட்டுத்தனமாக 5 சிக்சர்களையும் 37* (16) ரன்களும் ஆண்ட்ரே ரசல் 23* (8) ரன்களும் எடுத்து வெறித்தனமான ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 17.1 ஓவரிலேயே 180/4 ரன்கள் எடுத்த ட்ரிபங்கோ 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது. அதன் காரணமாக செயின்ட் கிட்ஸ் சார்பில் போஸ் 3 விக்கெட்டுகளை எடுத்த போதிலும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக இந்த தொடரில் ரசிகர்களை கவர்வதற்காக சில புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக கால்பந்தை போலவே விதிமுறைகளை மீறும் வீரருக்கு சிவப்பு நிற அட்டையை களத்தை விட்டு வெளியேற்றும் விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 20வது ஓவர் துவக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட 85 நிமிட நேரத்திற்குள் 19 ஓவர்களை வீசி முடிக்கும் அணிக்கு தண்டனையாக ஒரு வீரரை களத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு நடுவர் சிவப்பு அட்டையை காண்பிப்பார். அப்போது பந்து வீசம் அணியின் கேப்டன் தம்முடைய அணியிலிருந்து யார் வெளியேற வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் கடைசி ஓவரில் உள்வட்டத்திற்கு வெளியே 2 ஃபீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அது போன்ற நிலைமை இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய நைட் அணிக்கு ஏற்பட்டது. அதாவது 20வது ஓவரின் துவக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பந்து வீசியதால் நடுவர் சிவப்பு அட்டையை காண்பித்து உள் வட்டத்திற்கு வெளியே 2 ஃபீல்டர்களை குறைத்தார். அப்போது நடுவர் சிவப்பு அட்டையை காண்பித்ததன் காரணமாக கேப்டன் பொல்லார்ட் தம்முடைய அணியிலிருந்து சுனில் நரேன் களத்தை விட்டு வெளியேற சொன்னார்.

இதையும் படிங்க:உலக கோப்பை 2023 : தன்னுடைய 15 பேர் இந்திய அணியை தேர்வு செய்த டாம் மூடி – 33 வயது நட்சத்திர வீரருக்கு இடம்

அதைத்தொடர்ந்து களத்தை விட்டு வெளியேறிய சுனில் நரேன் சிபிஎல் டி20 வரலாற்றில் சிவப்பு அட்டையால் கழுத்தை விட்டு வெளியே முதல் வீரர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். கால்பந்தில் அடிக்கடி இந்த நிகழ்வைப் பார்த்து ரசிகர்களுக்கு கிரிக்கெட்டில் இப்படி பார்ப்பது வித்தியாசமானதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement