உலக கோப்பை 2023 : தன்னுடைய 15 பேர் இந்திய அணியை தேர்வு செய்த டாம் மூடி – 33 வயது நட்சத்திர வீரருக்கு இடம்

Tom Moody 5
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை நடைபெறுகிறது. 1987, 2011 போன்ற வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வெல்வதற்கு நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாடுகின்றன. அந்த எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

குறிப்பாக 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் 10 வருடங்களாக தொடர்ந்து தலைப்பினும் தோல்விகளை சந்தித்து வரும் இந்தியா அதற்கு சொந்த மண்ணில் முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக களமிறங்கி விளையாடும் 15 பேர் கொண்ட தரமான அணியை சௌரவ் கங்குலி போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் டாம் மூடி தம்முடைய 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

டாம் மூடி இந்திய அணி:
அதில் சௌரவ் கங்குலி உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த சூரியகுமார் யாதவை தம்முடைய அணியில் அவர் அதிரடியாக கழற்றி விட்டுள்ளார். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கினாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை சிறப்பாக செயல்படாத காரணத்தால் அவரை தேர்வு செய்யாத டா மூடி சஞ்சு சாம்சனையும் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் இசான் கிசானை தொடக்க மற்றும் விக்கெட் கீப்பர் வீரர் இடத்திற்கு பேக்-அப் வீரராக அவர் தேர்வு செய்துள்ளார்.

அதை விட ஆசிய கோப்பையில் அணியில் கழற்றி விடப்பட்ட யுஸ்வேந்திர சஹாலை தம்முடைய அணியில் முதன்மை ஸ்பின்னராக அவர் தேர்ந்தெடுத்துள்ளார். கடந்த 2017 முதல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு நிலையான இடத்தை பிடித்து விளையாடி வரும் சஹால் 2021 டி20 உலகக் கோப்பையில் சுமாரான ஃபார்ம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

இருப்பினும் ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று கம்பேக் கொடுத்த அவர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ரன்களை வாரி வழங்கியதால் ஆசிய கோப்பை அணியில் கழற்றி விடப்பட்டுள்ளார். ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மணிக்கட்டு ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற கோணத்தில் அவரை தம்முடைய அணியில் டாம் மூடி தேர்வு செய்துள்ளார். மற்ற படி வழக்கமான இதர முக்கிய வீரர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்துள்ள டாம் மூடியின் 2023 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இதோ:

இதையும் படிங்க:ஆசியக்கோப்பை 2023 : தொடர் முழுவதுமே வாய்ப்பில்லாமல் பெஞ்சில் அமரப்போகும் 2 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கீப்பர்), இஷான் கிசான் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்தர சஹால், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷார்துல் தாகூர்

Advertisement