ஆசியக்கோப்பை 2023 : தொடர் முழுவதுமே வாய்ப்பில்லாமல் பெஞ்சில் அமரப்போகும் 2 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

Asia-Cup
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட தயாராகி வருகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரானது தற்போது ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில் இந்திய அணியானது இந்த கோப்பையை கைப்பற்ற தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி மோதும் முதல் போட்டியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி கண்டியில் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு செப்டம்பர் 4-ஆம் தேதி நேபாள் அணியுடன் விளையாட இருக்கிறது.

இந்த இரண்டு போட்டிகளுக்கு அடுத்து சூப்பர் 4 சுற்றிலும் சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியிலும் விளையாடும். இந்த தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி ஆகஸ்ட் 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு பணிச்சுமை காரணமாக சுழற்சி முறையிலே வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அப்படி சுழற்சி முறையில் வாய்ப்பு கொடுத்தாலும் குறிப்பிட்ட இரண்டு வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பே கிடைக்காது என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

1) சூரியகுமார் யாதவ் : ஷ்ரேயாஸ் ஐயர் காயமடைந்து வெளியேறியதற்கு பின்னர் அவரது இடத்தை நிரப்புவதற்காக அணிக்குள் கொண்டுவரப்பட்ட சூரியகுமார் யாதவ் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மூன்று முறை முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை அளித்தார். அதுமட்டும் இன்றி வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த ஆசிய கோப்பை தொடரிலும் அவரே நான்காவது வீரராக களமிறங்குவார். எனவே இந்த தொடரில் சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது முடியாத காரியம். எனவே அவர் பெஞ்சில் அமர வேண்டியதுதான்.

- Advertisement -

2) திலக் வர்மா : இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் வேண்டும் என்கிற காரணத்தினால் அணியில் கொண்டுவரப்பட்ட 20 வயதான திலக் வர்மா இதுவரை இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடியதே கிடையாது. எனவே அவரும் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் இந்த ஆசியகோப்பை தொடர் மற்றும் 50 ஓவர் உலககோப்பை தொடர் என இரண்டுமே பெரிய தொடர்கள் என்பதால் அனுபவம் வாய்ந்த வீரர் தான் இந்திய அணியில் விளையாடுவர்.

இதையும் படிங்க : உண்மையிலேயே அந்த கொடுமையை என்னால தாங்க முடியல. அதான் ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டேன் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

ஒருவேளை இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடது கை ஆட்டக்காரர் வேண்டுமென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்துள்ள இஷான் கிஷனுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்பதனால் திலக் வர்மா இடம் பெறுவது என்பதும் அரிதான காரியம் தான். எனவே திலக் வர்மாவும் ஆசியக்கோப்பை தொடர் முழுவதுமே பெஞ்சில் அமரக்கூடியவர் தான்.

Advertisement