உண்மையிலேயே அந்த கொடுமையை என்னால தாங்க முடியல. அதான் ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டேன் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

Shreyas-Iyer
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்று வரும் ஆறு நாட்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த பயிற்சி ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அடுத்தடுத்து ஆசியக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் நான்காம் நிலை வீரராக களமிறங்கி விளையாடுவார் என்று தெரிகிறது. இந்திய அணி நீண்ட நாட்களாக தேடி வந்த நான்காம் இடத்திற்கான பேட்ஸ்மேன் என்று அனைவரும் ஷ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்த வேளையில் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் நான்காவது போட்டியின் போது காயம் காரணமாக அவர் அணியில் இருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவின் அறிவுரைப்படி அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கிரிக்கெட் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தப்பட்டது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் தன்னுடைய காயம் குறித்தும் அதிலிருந்து வெளிவந்த விதம் குறித்தும் பேசியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : நான் காயமடைந்த போது ஊசிகள், மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் தொடர்ந்து விளையாடலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னால் வலியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அதோடு மருத்துவக்குழுவும் என்னை ஆப்ரேஷன் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். என்னாலும் வலியை தாங்க முடியாததால் நான் ஆபரேஷனுக்கு ஒத்துக் கொண்டேன். என்னுடைய இந்த பிரச்சினையைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மூட்டு நகர்வும், நரம்பு சுருக்கமும் எனக்கு இருந்தது. அதன் காரணமாக அதனுடைய வலியானது என்னுடைய கடைசி சுண்டு விரல் வரை இருந்தது. அந்த அளவிற்கு ஒரு கட்டத்தில் நான் வலியை அனுபவித்திருந்தேன்.

- Advertisement -

அதன் பின்னர்தான் லண்டன் சென்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டேன். அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் மூன்று மாதங்கள் வரை எனக்கு அந்த வலி தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருந்தது. அதன் பிறகு பெங்களூருக்கு சென்ற நான் அங்கு சிகிச்சை மற்றும் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு தற்போது முழு பிட்னஸ் உடன் அணிக்கு திரும்பியிருப்பதில் மகிழ்ச்சி. மூன்று மாதங்களுக்கு முன்பு நான் இவ்வளவு விரைவாக குணமடைந்து இந்திய அணியில் இணைவேன் என்று எதிர்பார்க்கவில்லை.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை 2023 : போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம்? இந்திய நேரப்படி போட்டிகள் – எத்தனை மணிக்கு துவங்கும்?

ஆனால் என்னுடைய பிட்னஸ்-காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள அனைவரும் மிகப்பெரிய உதவியை புரிந்துள்ளனர். அதுமட்டும் இன்றி எனது குடும்பம், நண்பர்கள் என என்னை சுற்றி ஒரு நல்ல சூழல் இருந்ததால் நான் அந்த காயத்திலிருந்து மீண்டு வந்ததாக நினைக்கிறேன். எதிர்வரும் தொடர்களில் நிச்சயம் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்காக வழங்க காத்திருக்கிறேன் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement