ஆசியக்கோப்பை 2023 : போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம்? இந்திய நேரப்படி போட்டிகள் – எத்தனை மணிக்கு துவங்கும்?

Asia-Cup
- Advertisement -

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் 2023-ஆம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போவது யார் என்கிற ஆவல் எழுந்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நாளை மறுதினம் துவங்கும் இந்த தொடரானது செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் மீதமுள்ள போட்டிகள் மற்றும் இறுதி போட்டிகள் என அனைத்தும் இலங்கையில் நடைபெற இருக்கின்றன.

- Advertisement -

அதோடு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கண்டி மைதானத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டிகளை எந்த தொலைக்காட்சியில் காணலாம்? போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? என்பது குறித்த தெளிவான தகவலை இங்கே நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி இந்த ஆசியக் கோப்பை போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரை ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் அனைத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும் போட்டிகளை பல்வேறு மொழிகளில் கண்டு களிக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2023 : இங்கயே திணறுனா எப்டி இந்தியாவ ஜெய்ப்பீங்க, வென்றும் பாகிஸ்தானை விளாசிய கம்ரான் அக்மல் – காரணம் என்ன?

அதோடு ஆன்லைன் மூலம் போட்டிகளை காண விரும்புவோர் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் என்கிற செயலி மூலம் போட்டிகளை கண்டுகளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 50 ஓவர் உலககோப்பை தொடர் மற்றும் ஆசிய கோப்பைத் தொடர் என இருபெரும் தொடர்களை ஒளிபரப்பவுள்ள ஹாட்ஸ்டார் நிறுவனமானது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக இந்த இரண்டு மாபெரும் தொடர்களையும் இலவசமாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement