ஆசிய கோப்பை 2023 : இங்கயே திணறுனா எப்டி இந்தியாவ ஜெய்ப்பீங்க, வென்றும் பாகிஸ்தானை விளாசிய கம்ரான் அக்மல் – காரணம் என்ன?

kamran Akmal 3
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து கோப்பையை முத்தமிட்டு வென்ற பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாகவும் முன்னேறி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக விரைவில் துவங்கும் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு நம்பர் ஒன் அணியாக பாகிஸ்தான் முன்னேறியுள்ளதால் இந்தியா போன்ற எதிரணிகளை வீழ்த்தி ஆசிய மற்றும் உலக சாம்பியனாக தங்களது அணி வெற்றி வாகை சூடும் என அந்நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இருப்பினும் இந்த தொடரில் ஆரம்பம் முதலே கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கில் பாகிஸ்தான் நிறையவே தடுமாறியது என்று சொல்லலாம். குறிப்பாக முதல் போட்டியில் 201 ரன்களுக்குத் சுருண்ட பாகிஸ்தான் 2வது போட்டியில் 300 ரன்களை 9 விக்கெட்டுகளை இழந்து அதிர்ஷ்டத்தால் வென்றது. அதே போல 3வது போட்டியிலும் 268 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி தரமான பவுலிங்கை பயன்படுத்தியே வென்றது என சொல்லலாம்.

- Advertisement -

இங்கயே திணறல்:
இந்நிலையில் இந்த சாதாரண இந்த சாதாரண இருதரப்பு தொடரில் ஆப்கானிஸ்தான் போன்ற அணிக்கு எதிராகவே 300 ரன்கள் அடிக்க தவறிய நீங்கள் இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக எப்படி ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் வெல்லப்போகிறீர்கள் என முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பாகிஸ்தானை விமர்சித்துள்ளார். இது பற்றிய தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நவீன கிரிக்கெட்டில் அனைத்து பேட்ஸ்மன்களும் நேர்மறையாக விளையாட வேண்டும்”

“இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக நீங்கள் 300 ரன்கள் அடிக்காமல் போனால் எப்படி ஆசிய கோப்பையில் இந்தியாவை எதிர்கொள்வீர்கள்? அது மிகவும் கடினமாகி விடும். இது பாகிஸ்தானுக்கு நல்ல பயிற்சிகளை எடுக்கும் தொடராக அமைந்தது. அதில் 2 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்றும் நாம் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. எனவே பேட்ஸ்மேன்கள் இன்னும் சற்று பொறுப்பை காட்ட வேண்டும்”

- Advertisement -

“நீங்கள் 2வது போட்டியில் 300 ரன்கள் அடித்தீர்கள் ஆனால் பேட்ஸ்மேன்கள் அப்போட்டியை முடித்திருக்க வேண்டும். ஏனெனில் அப்போட்டியில் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் போட்டியை ஃபினிஷிங் செய்தனர். இது பாகிஸ்தான் அணிக்கு நல்ல அறிகுறியல்ல” என்று கூறினார்.

இதையும் படிங்க:

அவர் கூறுவது போல இந்தத் தொடரிலேயே பேட்டிங்கில் தடுமாறினால் நிச்சயமாக தரமான எதிரணிகளை கொண்ட ஆசிய மற்றும் உலக கோப்பையில் பாகிஸ்தான் தடுமாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 2ஆம் தேதி வலுவான இந்தியாவை தன்னுடைய முதல் ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement