வீடியோ : இது நம்ம ஊர்ல அவுட்டா? எங்களுக்கு எதிரா சதி பண்ணாதீங்க, வெற்றிக்கு எதிராக அமைந்த அம்பயரை திட்டும் பாக் ரசிகர்கள்

Sarfraza Ahmed Stumping
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் முதல் போட்டியில் சந்திக்க வேண்டிய தோல்வியிலிருந்து கடைசி நாளில் போதிய வெளிச்சமின்மையால் தப்பி டிரா செய்தது. மேலும் 2022இல் சொந்த மண்ணிலேயே சரமாரியான அடிவாங்கி உலக அளவில் விமர்சனங்களை சந்தித்த அந்த அணி 2023 புத்தாண்டில் வெற்றி பாதைக்கு திரும்புவதற்காக ஜனவரி 2ஆம் தேதியன்று துவங்கிய 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங் செய்து தார் ரோடு போலிருந்த பிட்ச்சில் மீண்டும் பாகிஸ்தான் பவுலர்களை திறம்பட எதிர்கொண்டு 449 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு 134 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த டாம் லாதம் 71 ரன்களிலும் டேவோன் கான்வே சதமடித்து 122 ரன்களும் குவித்து அவுட்டானார்கள். அவர்களைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன் 36, ஹென்றி நிக்கோலஸ் 26, டார்ல் மிச்ஸேல் 3, டாம் ப்ளண்டல் 51, மைக்கேல் பிரேஸ்வெல் 0 என முக்கிய வீரர்களை பெரிய ரன்களை எடுக்க விடாமல் பாகிஸ்தான் அவுட்டாக்கியது. ஆனால் 10 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தொல்லை கொடுத்த மாட் ஹென்றி 68* ரன்கள் குவித்து 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது அவருடன் விளையாடிய அஜாஸ் பட்டேல் 35 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இதெல்லாம் அவுட்டா:
அப்படி டெயில் எண்டர்களிடம் அவமானத்தை சந்தித்த பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு சபிக் 19, சான் மசூட் 20, பாபர் அசாம் 24 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக பேட்டிங் செய்த இமாம்-உல்-ஹக் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமது எதிர்ப்புறமிருந்த சவுத் ஷாகீலுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

நேரம் செல்ல செல்ல நியூசிலாந்து பவுலர்களுக்கு சவாலை கொடுத்த அந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் பாகிஸ்தானை வலுப்படுத்திய போது 78 ரன்களில் இருந்த சர்ப்ராஸ் அகமது டார்ல் மிட்சேல் வீசிய ஒரு பந்தை அடிக்க முயற்சித்தும் லெக் சைடில் சென்றதால் தவற விட்டார். அதைக் கச்சிதமாக பிடித்த விக்கெட் கீப்பர் டாப் ப்ளண்டல் ஸ்டம்பிங் செய்து நடுவரிடம் அவுட் கேட்டார். அதை டிவி ரிப்ளையில் ஆராய்ந்த போது அவருடைய பின்னங்கால் வெள்ளை கோட்டுக்கு மேலே இருந்தாலும் முன்னங்கால் கிட்டத்தட்ட எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு வெள்ளைக்கோட்டில் இருந்ததால் அவுட்டில்லை என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் பின்னங்கால் முழுவதுமாக வெள்ளை கோட்டுக்கு உள்ளே இல்லாத காரணத்தால் பாகிஸ்தானை சேர்ந்த 3வது நடுவர் ஹசன் ராசா அது அவுட் என்று பெரிய திரையில் அறிவித்தது ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஏனெனில் அந்த சமயத்தில் அவர் காலை ஓரிரு இன்சுகள் கூட காற்றில் தூக்கவில்லை. மேலும் தேவையான அளவு கால் வெள்ளைக்கோட்டில் இருந்த நிலையில் ஒருவேளை சந்தேகமிருந்தால் அதன் பலனை பேட்ஸ்மேனுக்கு கொடுக்க வேண்டிய அம்பயர் யாருமே எதிர்பாராத வகையில் அவுட் கொடுத்தார்.

அதனால் இதெல்லாம் நம்ம ஊரில் அவுட்டா என்று அந்த நடுவரை விமர்சிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் ஒழுங்காக விதிமுறைகளை படிக்காமல் நமது நாட்டுக்கு எதிராகவே இப்படி சுமாராக செயல்பட்டுள்ளீர்களே என்று கடுமையாக திட்டி தீர்க்கிறார்கள். மேலும் இந்த தவறான அவுட்டால் இப்போட்டியில் பாகிஸ்தானின் வெற்றி உங்களால் எங்கள் கண்முன்னே நழுவிச் செல்வதாகவும் அந்நாட்டு ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஆகா சல்மான் 41, ஹசன் அலி 4, நசீம் ஷா 4 என அடுத்து வந்த பேட்ஸ்மேன் வரை சொற்ப ரன்களில் நியூசிலாந்து காலி செய்தது.

இதையும் படிங்கIND vs SL : இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சு சாம்சன் – காரணம் என்ன தெரியுமா?

அதனால் 3வது நாள் முடிவில் சவுத் ஷாகீல் 124* ரன்கள் எடுத்ததால் 407/9 ரன்கள் எடுத்துள்ள பாகிஸ்தான் இன்னும் நியூசிலாந்தை விட 42 ரன்கள் பின்தங்கியுள்ளது. அதனால் தற்சமயத்தில் வெற்றி வாய்ப்பு குறைந்துள்ள பாகிஸ்தான் இப்போட்டியில் போராடி ட்ரா அல்லது தோல்வியை சந்திக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement