IND vs SL : இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சு சாம்சன் – காரணம் என்ன தெரியுமா?

Samson-and-BCCI
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs SL

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது ஜனவரி 5-ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் இருந்து இளம் வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி வெளியான அறிக்கையில் : முதலாவது டி20 போட்டியின் போது கேட்ச் பிடிக்க சென்ற சஞ்சு சாம்சன் டைவ் அடித்தபோது அவரின் முழங்கால் காயமடைந்தது. ஆனாலும் தொடர்ந்து பீல்டிங் செய்த சஞ்சு சாம்சன் போட்டியின் முடிவில் கால் வீக்கம் இருப்பதை தாமதமாக உணர்ந்தார்.

Sanju Samson

பின்னர் அவரது உடல்நிலை குறித்து பரிசோதனை செய்த போது அவருக்கு முழங்காலில் வீக்கம் இருப்பது உறுதியானது. இதன் காரணமாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள இருப்பதால் அவர் மும்பையிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இதன் காரணமாக அவர் புனேவில் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டிக்கான அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. முதலாவது டி20 போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறிய சஞ்சு சாம்சன் 6 பந்துகளை சந்தித்து 5 ரன்களில் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 13 ஆண்டுகால தோனி – யூசுப் சாதனையை முறியடித்த ஹூடா – அக்சர் படேல் ஜோடி – விவரம் இதோ

சமீபகாலமாகவே இந்திய அணியில் வாய்ப்பு தொடர்ந்து கிடைப்பதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு குவிந்த வேளையில் தற்போது அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தும் காயம் காரணமாக அவர் விளையாட முடியாமல் போனது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்திற்குரிய விடயமாக மாறியுள்ளது.

Advertisement