13 ஆண்டுகால தோனி – யூசுப் சாதனையை முறியடித்த ஹூடா – அக்சர் படேல் ஜோடி – விவரம் இதோ

Hooda-and-Axar
- Advertisement -

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2023-ஆம் ஆண்டு துவங்கி முதல் முறையாக இந்திய அணி பங்கேற்ற முதலாவது டி20 போட்டியிலேயே அசத்தலான வெற்றியை பெற்று ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஆட்டத்தில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி மோதியது.

IND vs SL

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 160 ரன்கள் மட்டுமே குவித்ததால் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி ஒரு கட்டத்தில் 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த தீபக் ஜே=ஹூடா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரது ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. இதில் தீபக் ஹூடா 41 ரன்களையும், அக்சர் பட்டேல் 31 ரன்களும் எடுத்து அசத்தினர்.

Yusuf Pathan

இந்நிலையில் இவர்கள் அமைத்த இந்த பாட்னர்ஷிப் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஏற்கனவே இந்திய அணிக்காக ஆறாவது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்கிற சாதனையை வைத்திருந்த தோனி மற்றும் யூசுப் பதான் ஆகியோரது சாதனையை முறியடித்துள்ளது.

- Advertisement -

தோனி மற்றும் யூசுப் தான் ஆகியோர் கடந்த 2009-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆறாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் குவித்திருந்தனர். அவர்களை தற்போது கடந்துள்ள அக்சர் பட்டேல் மற்றும் தீபக் ஹூடா இந்த போட்டியின் மூலம் 68 ரன்கள் குவித்து ஆறாவது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க : வீடியோ : இது எப்படி அவுட்டில்லாம போகும்? டு பிளேஸிஸ் முதல் ரசிகர்கள் வரை அம்பயரை திட்ட காரணம் என்ன

இந்த பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் ஆறாவது விக்கெட்டிற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 70 ரன்கள் குவித்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement