வீடியோ : சொன்ன மாதிரியே ரோஹித், விராட் கோலியை செஞ்சு விட்ட ஷாஹீன் அப்ரிடி – இந்தியா திணறல், ரசிகர்கள் கவலை

Advertisement

ஐசிசி 2023 உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியிலேயே நேபாளை அடித்து நொறுக்கி மெகா வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றது. அப்படி அதிரடி வெற்றியை பெற்ற பாகிஸ்தானை செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கண்டி நகரில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் எதிர்கொண்டது.

அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தையும் பெற்ற முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. குறிப்பாக மழை பெய்யும் வானிலை நிலவுவதால் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் 2 பவுண்டரிகளை பறக்க விட்ட ரோகித் சர்மா நல்ல துவக்கத்தை பெற்ற போது அரை மணி நேரத்தில் வந்த மழை போட்டியை நிறுத்தியது.

- Advertisement -

இந்தியா தடுமாற்றம்:
இருப்பினும் சிறிது நேரத்தில் மழை ஒதுங்கிய நிலையில் மீண்டும் துவங்கிய போட்டியில் ஷாஹீன் அப்ரிடி வீசிய 5வது ஓவரில் நன்றாக ஸ்விங்காகி வந்த கடைசி பந்தை தவறாக கணித்த ரோகித் சர்மா 11 (21) ரன்களில் கிளீன் போல்ட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதை விட இந்தியாவை காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் தம்முடைய அடுத்த ஓவரின் 3வது பந்தில் இன்சைட் எட்ஜ் முறையில் 4 (7) ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கிய ஷாஹீன் அப்ரிடி இந்திய பேட்டிங் துறையின் 2 முதுகெலும்பு பேட்ஸ்மேன்களையும் உடைத்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்து பாகிஸ்தானுக்கு அபாரமான துவக்கத்தை பெற்றுக் கொடுத்தார். முன்னதாக கடந்த ஒரு வாரமாகவே அவருக்கு எதிராக மிகவும் கவனத்துடன் விளையாட வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை எச்சரித்தனர்.

- Advertisement -

அதற்கேற்றார் போல் இப்போட்டியில் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவியதை பயன்படுத்தி அவர் வீசிய ஸ்விங் பந்துகளின் லைனை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சரியாக கணிக்க தவறி தங்களது விக்கெட்டை தாரை வார்த்தனார். அதன் காரணமாக ஆரம்பத்திலேயே 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்தியாவை காப்பாற்று முனைப்புடன் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 2 பவுண்டரியை அடித்து நல்ல துவக்கத்தை பெற்றார்.

ஆனால் மிரட்டல் வேகத்தில் வீசக்கூடிய ஹரிஷ் ரவூப்க்கு எதிராக தாக்கு பிடிக்க முடியாத அவர் 14 (9) ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி சென்றார். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக ஆசிய கோப்பையில் அவர் விளையாடக்கூடாது என்று சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வீடியோ : சொன்ன மாதிரியே ரோஹித், விராட் கோலியை செஞ்சு விட்ட ஷாஹீன் அப்ரிடி – இந்தியா திணறல், ரசிகர்கள் கவலை

இருப்பினும் முக்கிய வீரர் என்பதால் வாய்ப்பு பெற்று நேரடியாக களமிறங்கிய அவர் ஏமாற்றத்தை கொடுத்ததால் சற்று முன் வரை மீண்டும் மழை வந்த போது 11.2 ஓவரில் 51/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா திணறலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.

Advertisement