INDvsPAK : அரைமணி நேரம் கூட ஆகல. அதற்குள் பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி – என்ன ஆனது?

Umpire-IND-vs-PAK
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த வேளையில் இது தொடரின் முக்கியமான மூன்றாவது போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி சற்று முன்னர் துவங்கியது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வவேற்பினை பெற்றிருந்த இந்த போட்டியானது செப்டம்பர் 2-ஆம் தேதி இன்று பல்லக்கல்லே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய அணி அரைமணி நேரம் கூட முழுவதுமாக பேட்டிங் செய்யாத வேளையில் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்திய அணி 4.2 ஓவர்கள் பேட்டிங் செய்து விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணி சார்பாக கேப்டன் ரோகித் சர்மா 18 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரிகளுடன் 11 ரன்களையும், சுப்மன் கில் 8 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர். இப்படி இந்த போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டதற்கு காரணம் யாதெனில் :

- Advertisement -

கடந்த சில நாட்களாகவே போட்டி நடைபெறும் பல்லகல்லே மைதானத்தில் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை வெளியாகி வந்த நிலையில் அந்த அறிவிப்பின் படியே சரியாக இன்றைய போட்டி ஆரம்பித்து 22-வது நிமிடத்தில் மழை பெய்ய துவங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs PAK : கம்பீர் சொன்னா நான் கேக்கனுமா? தைரியமான முடிவை கையிலெடுத்த ஹிட்மேன் – விவரம் இதோ

தொடர்ந்து மழை பெய்தால் போட்டி நடத்த முடியாமல் கூட போகலாம். ஒருவேளை சிறிது நேரம் கழித்து மழை நின்றால் நிச்சயம் போட்டி மீண்டும் துவங்கும் என்றும் இடையிடையே மழை பெய்தால் ஓவர்கள் குறைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முழு போட்டியையும் காண தற்போது ரசிகர்கள் வருண பகவானை வேண்டி வருகின்றனர்.

Advertisement