IND vs PAK : கம்பீர் சொன்னா நான் கேக்கனுமா? தைரியமான முடிவை கையிலெடுத்த ஹிட்மேன் – விவரம் இதோ

Rohit-and-Gambhir
- Advertisement -

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியானது கண்டி நகரில் செப்டம்பர் 2-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததால் தற்போது முதல் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வந்தது. ஏனெனில் அந்த அளவிற்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க இந்திய அணியின் வீரர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீரும் ஷர்துல் தாகூரை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எடுக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.

ஏனெனில் ஷர்துல் தாகூரை ஒரு முழுநேர பவுலராகவும் ஏற்றுக்கொள்ள முடியாது, ஒரு முழுநேர பேட்ஸ்மேனாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் ஒரு அரைகுறையான வீரர் என்று விமர்சனம் செய்ததோடு அவரை அணியில் எடுக்கக் கூடாது என்றும் விமர்சித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது பேச்சுக்கெல்லாம் செவி சாய்க்காமல் அவரின் கருத்திற்கு நேர் எதிராக ஷர்துல் தாகூரை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா சேர்த்துள்ளார். முகமது ஷமிக்கு இடம் கொடுக்கப்படாமல் இந்திய அணியின் பேட்டிங் டெப்த்தை கணக்கில் கொண்டே ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : IND vs PAK : முக்கிய வீரருக்கு இடமில்லை. பாகிஸ்தான் அணிக்கெதிரான பிளேயிங் லெவன் இதுதான் – ரோஹித் சர்மா அறிவிப்பு

ஏனெனில் ஷர்துல் தாகூர் பந்து வீசுவதோடு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறிதளவு கை கொடுக்க முடியும். எனவே அதன் காரணமாகவே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எது எப்படி இருப்பினும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது அனைவரது மத்தியிலும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement