IND vs PAK : முக்கிய வீரருக்கு இடமில்லை. பாகிஸ்தான் அணிக்கெதிரான பிளேயிங் லெவன் இதுதான் – ரோஹித் சர்மா அறிவிப்பு

Rohit-Sharma-IND-vs-PAK
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடருக்கான மிக முக்கிய போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கண்டி நகரில் சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே வெளியான வானிலை அறிக்கையில் இன்றைய போட்டி நடைபெறுவதில் மழையால் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்று ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் போட்டியின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பே கடந்த சில நாட்களாக ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

ஏனெனில் ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா போன்ற வீரர்கள் அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பதாலும், கே.எல் ராகுல் காயத்தால் வெளியேறி இருப்பதாலும் அணியின் காம்பினேஷன் எவ்வாறு அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் முக்கிய வீரரான முகமது ஷமி இடம்பெறாமல் அவருக்கு பதிலாக மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூர் இடம்பெற்றுள்ளார்.

- Advertisement -

அவர்களை தவிர்த்து ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சாளராகவும் விளையாடுவதாக ரோஹித் தெரிவித்துள்ளார். மேலும் கே.எல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் இடம் பிடித்துள்ளதாக கூறியிருந்தார். அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : டிராவிட், ரோஹித் சர்மா செஞ்ச கூத்தால இந்திய ரசிகர்களுக்கு கூட அதை சொல்ல தெரியாது – இந்திய அணி பற்றி ரமீஸ் ராஜா விமர்சனம்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) இஷான் கிஷன், 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement