டிராவிட், ரோஹித் சர்மா செஞ்ச கூத்தால இந்திய ரசிகர்களுக்கு கூட அதை சொல்ல தெரியாது – இந்திய அணி பற்றி ரமீஸ் ராஜா விமர்சனம்

Ramiz Raza
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் பல்லக்கேல் நகரில் நடைபெறும் அப்போட்டியில் களமிறங்கும் தங்களுடைய 11 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் முதல் நாளே வெளிப்படையாக அறிவித்து விட்டது. ஆனால் கேஎல் ராகுல் காயமடைந்துள்ள நிலைமையில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற குழப்பம் மற்றும் 4வது இடத்தில் விளையாடப் போவது யார் என்ற நிலவுவதால் இந்தியா தங்களுடைய 11 பேர் அணியை கடைசி நேரத்தில் தான் வெளியிட உள்ளது.

சொல்லப்போனால் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் தங்களுடைய ஆசிய கோப்பை அணிகளை முதல் ஆளாக அறிவித்த நிலையில் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் காயத்தை சந்தித்திருந்ததால் இந்தியா தங்களுடைய அணியை மிகவும் தாமதமாகவே வெளியிட்டது. அதை விட பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதலே சோதனைகள் என்ற பெயரில் ராகுல் டிராவிட் செய்த தேவையற்ற மாற்றங்கள் கடந்த ஒரு வருடமாகவே இந்திய அணியை செட்டிலாகி எப்போதும் விளையாடவில்லை என்று சொல்லலாம்.

- Advertisement -

ரமீஸ் ராஜா விமர்சனம்:
சொல்லப்போனால் உலகக் கோப்பைக்கு 50 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவை அவர் 7வது இடத்தில் களமிறக்கி அழகு பார்த்தது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் 2007உலகக்கோப்பையில் பேட்டிங் வரிசையில் தாறுமாறான மாற்றங்களை கேப்டனாக செய்த அவர் தற்போது பயிற்சியாளராக இந்திய அணியை கெடுத்து வைத்துள்ளதாக நிறைய ரசிகர்கள் சமீப காலங்களாகவே விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய ரசிகர்களால் கூட எளிதாக தங்களின் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்ய முடியாத அளவுக்கு ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடங்கிய அணி நிர்வாகம் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜா விமர்சித்துள்ளார். அது இந்தியாவுக்கு பாதகத்தையும் பாகிஸ்தானுக்கு சாதகத்தையும் ஏற்படுத்தும் அம்சமாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியா இன்னும் பதற்றத்துடன் தங்களுடைய சரியான கலவையை தேடிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் கூட அவர்களால் ஒரு நிலையான செட்டிலான அணியை உருவாக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக சோதனைகள் என்ற பெயரில் வெற்றி பெறும் அணியில் கூட அவர்கள் தொடர்ந்து மாற்றங்களை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது”

இதையும் படிங்க: இன்னும் 3 நாள் தான் இருக்கு அவர் வர மாதிரி தெரியல, 2023 உ.கோ இந்திய அணிக்கு ஏற்படும் பின்னடைவு பற்றி – கவாஸ்கர் கவலை பேட்டி

“ஏனெனில் பேட்டிங் ஆர்டரை மாற்றுவது, புதிய கலவை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது போன்ற அவர்களுடைய டிங்கரிங் வேலைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதனால் தற்சமயத்தில் நீங்கள் யாரிடமாவது பாகிஸ்தான் 11 பேர் அணியை கேட்டால் அவர்களால் எளிதாக சொல்ல முடியும். ஆனால் இந்தியாவின் 11 பேர் அணியை தேர்வு செய்யுமாறு கேட்டால் அனைவருக்கும் சந்தேகமே ஏற்படும். இது பாகிஸ்தானுக்கு சாகதத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சமாக இருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement