இன்னும் 3 நாள் தான் இருக்கு அவர் வர மாதிரி தெரியல, 2023 உ.கோ இந்திய அணிக்கு ஏற்படும் பின்னடைவு பற்றி – கவாஸ்கர் கவலை பேட்டி

Sunil Gavaskar 3
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் இந்திய மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. அந்த வகையில் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட இந்திய அணியிலிருந்து தான் உலகக்கோப்பையில் விளையாடப் போகும் இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது. அந்த சூழ்நிலையில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக மிடில் ஆர்டரில் விளையாடி ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் கடந்த 2023 ஐபிஎல் தொடரில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் லேசான காயத்தை சந்தித்துள்ளார்.

அதனால் இந்த ஆசிய கோப்பையின் 2 லீக் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ள அவர் சூப்பர் 4 சுற்று துவங்குவதற்கு முன்பாக குணமடைந்து வந்து விடுவார் என நம்புவதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தனர். எனவே நிலைமையை சமாளிப்பதற்காக இசான் கிசான் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

கவாஸ்கர் கவலை:
ஆனால் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் உட்பட தம்முடைய கேரியரில் பெரும்பாலும் தொடக்க வீரராக விளையாட பழகிய அவரால் திடீரென மிடில் ஆர்டரில் வெற்றிகரமாக செயல்பட முடியுமா என்ற கவலை ரசிகர்களிடம் காணப்படுகிறது. இது ஒருபுறமிருக்க 2023 உலகக்கோப்பை அணியை அனைத்து நாடுகளும் அறிவிப்பதற்காக செப்டம்பர் 5ஆம் தேதியை ஐசிசி கடைசி நாளாக கெடு விதித்துள்ளது.

இருப்பினும் அதற்கு 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் பெங்களூருவில் குணமடைந்து வரும் ராகுல் தேர்வு செய்யப்படுவது கடினம் என்று சுனில் கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார். எனவே ஒருவேளை ராகுல் வெளியேறினால் அது இந்தியாவுக்கு பின்னடைவு என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் என்சிஏவில் மருத்துவர்களிடம் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்புகிறார். இது மிகவும் பதற்றமான சூழ்நிலை என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“ஏனெனில் ஒருவேளை அவர் செப்டம்பர் 5ஆம் தேதிக்கு முன்பாக விளையாடாமல் போனால் அந்த சூழ்நிலையை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள். குறிப்பாக எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் உலகக் கோப்பைக்கு தேர்வாவது பலவீனமான ஒன்றாகும். எனவே இந்த விஷயத்தில் முடிவெடுப்பது தேர்வுக்குழுவுக்கு கடினமாக இருக்கும். ஆனாலும் அதற்கான விடை ஆசிய கோப்பையின் முதலிரண்டு போட்டிகளில் கிடைக்கலாம். ஒருவேளை நீங்கள் ராகுலை தாண்டி செல்ல விரும்பினால் அது சோகமான நிதர்சனமாகும்”

இதையும் படிங்க: IND vs PAK : ஷ்ரேயாஸ் ஐயர் வேண்டாம். 4 ஆவது இடத்தில் அவரை விளையாட வையுங்க – கவுதம் கம்பீர் கருத்து

“ஏனெனில் கிளாஸ் நிறைந்த வீரரான அவர் இல்லாதது பின்னடைவாக அமையலாம். இருப்பினும் உலகக்கோப்பை அணியை அறிவிப்பதற்கு முன்பாக எந்தவிதமான போட்டிகளிலும் விளையாடாமல் போனால் அவர் அதில் தேர்வு செய்யப்படுவது மிகவும் கடினமாகி விடும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஒருவேளை விரைவில் ராகுல் குணமடைந்து ஆசிய கோப்பையில் விளையாடாமல் போனால் உலக கோப்பையில் தேர்வு செய்யப்படுவது கடினமாகலாம். அதனால் அவரை போன்ற அனுபவமிக்க கிளாஸ் நிறைந்த வீரர் வெளியேறுவது இந்தியாவுக்கும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

Advertisement