IND vs PAK : ஷ்ரேயாஸ் ஐயர் வேண்டாம். 4 ஆவது இடத்தில் அவரை விளையாட வையுங்க – கவுதம் கம்பீர் கருத்து

Gambhir-and-Shreyas-Iyer
- Advertisement -

நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று செப்டம்பர் இரண்டாம் தேதி கண்டி நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையப்போகிறது? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் இந்திய அணியின் முன்னணி வீரரான கே.எல் ராகுல் முதல் 2 போட்டியிலும் விளையாட மாட்டார் என்ற தகவல் இந்திய அணிக்கு பின்னடைவை தந்துள்ளது.

இதன் காரணமாக கே.எல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்க உள்ளார். இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் டாப் ஆர்டரில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி டாப் ஆர்டர் வரிசையில் மாற்றங்கள் நிகழும் போது அணியில் அதில் சாதகத்தை ஏற்படுத்துமா? அல்லது பாதகத்தை ஏற்படுத்துமா? என்பது போட்டியின் போது தான் தெரியவரும்.

- Advertisement -

இந்நிலையில் இஷான் கிஷன் அணியில் இடம்பெறும் வேளையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசை எவ்வாறு அமைய வேண்டும்? என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் இன்றைய போட்டியில் இஷான் கிஷன் அணியில் இடம் பிடிக்கும் பட்சத்தில் அவரும் சுப்மன் கில்லும் தான் துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏனெனில் இளம் வீரர்களான அவர்கள் துடிப்பான ஆட்டத்தை அதிரடியான வெளிப்படுத்துவார்கள் என்பதனால் அவர்கள் இருவரையுமே துவக்க வீரர்களாக களமிறக்க வேண்டும் என்றும் மூன்றாவது இடத்தில் எப்போதுமே நிலையாக விளையாடும் விராட் கோலி விளையாட வேண்டும் அதில் எந்த ஒரு மாற்றமும் இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அனுபவமும், திறமையும் கூடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் நான்காவது இடத்தில் அவர் களமிறங்கும் போது அணியின் சூழ்நிலை எவ்வாறு இருந்தாலும் அதனை மிகச் சிறப்பாக கையாண்டு இறுதி நேரத்தில் அதிரடி காண்பிப்பார் என்பதால் அவர் நான்காவது இடத்தில் விளையாட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : என்னை விட மூத்த அவருடன் கம்பேர் பண்ணாதீங்க, எங்களோட நட்பு பற்றி உங்களுக்கு தெரியாது – இந்திய வீரர் பாபர் அசாம் பேட்டி

அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. போட்டி நடைபெற இன்னும் சில மணி நேரங்களில் இருக்கும் வேளையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் பாகிஸ்தான் அணி நேற்றே இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கான பிளேயிங் லெவனை வெளியிட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement