வீடியோ : போதும்யா ஓவரா புகழாத, திலக் வர்மாவை கலாய்த்த ரோஹித் சர்மா – அப்படி என்ன சொன்னாருன்னு பாருங்க

- Advertisement -

இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்ற தன்னுடைய 3வது போட்டியில் டெல்லியை அதன் சொந்த ஊரில் கடைசி பந்து வரை போராடி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது அந்த அணி ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் 19.4 ஓவரில் 172 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக அக்சர் படேல் 54 (25) ரன்களும் கடைசி வரை மெதுவாக விளையாடிய கேப்டன் டேவிட் வார்னர் 51 (47) ரன்களும் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா மற்றும் ஜேசன் பெரன்ஃடாப் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய மும்பைக்கு இஷான் கிசான் 31 (26) ரன்களில் அவுட்டாகி சென்றாலும் கேப்டன் ரோஹித் சர்மா நீண்ட நாட்கள் கழித்து அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார்.

- Advertisement -

புகழ்ந்தது போதும்யா:
குறிப்பாக 2021க்குப்பின் 2 வருடங்கள் 24 இன்னிங்ஸ்கள் கழித்து முதல் முறையாக அரை சதமடித்த அவருடன் 2வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இளம் வீரர் திலக் வர்மா 1 பவுண்டரி 4 சிக்சருடன் 41 (29) ரன்கள் விளாசி அவுட்டானார். அப்போது வந்த சூரியகுமார் மீண்டும் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்ற நிலையில் ரோகித் சர்மாவும் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 65 (45) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதியில் டிம் டேவிட் 13* ரன்களும் கேமரூன் கிரீன் 17* ரன்களும் எடுத்து கடைசி பந்தில் வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னாதாக கடந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு அசத்தலாக செயல்பட்ட திலக் வர்மா இந்த சீசனில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தனி ஒருவனாக 84* ரன்கள் குவித்து மும்பையின் வெற்றிக்கு போராடினார். அந்த வகையில் இந்த போட்டியிலும் 41 ரன்கள் எடுத்து மிகவும் இளமையுடன் திறமையுடன் அசத்த துவங்கியுள்ள அவர் மும்பை அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார். அந்த நிலையில் நேற்றைய போட்டியின் முடிவில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் பேட்டி கொடுத்த அவர் உங்களுடன் எப்போதாவது பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட வேண்டும் என்று சிறுவயதிலிருந்து கண்ட கனவு இந்த போட்டியில் நிஜமானதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த வருடத்திலிருந்து உங்களுடன் பேட்டிங் செய்வதற்காக நான் காத்திருக்கிறேன். அந்த வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது. அதை நான் முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன் என்று நினைக்கிறேன். உங்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது எனக்கு நிறைய மகிழ்ச்சியை கொடுத்தது. இது என்னுடைய சிறு வயது கணவாகும்” என்று கூறினார். அப்போது குறிப்பிட்ட ரோஹித் சர்மா “போதும் தம்பி. தயவு செய்து இப்படி புகழ்வதை இப்போதே நிறுத்து” இன்று கலகலப்புடன் பதிலளித்தார்.

அதை தொடர்ந்து திலக் வர்மா பேசியது பின்வருமாறு. “சமீப காலங்களில் காயங்களை சந்தித்த போதும் நான் மீண்டும் களமிறங்கி விளையாடுவதற்காக மனதளவில் வலுவாக இருந்தேன். இந்த ஐபிஎல் தொடருக்காக நான் சற்று எக்ஸ்ட்ராவாக உழைத்தேன். குறிப்பாக கடந்த வருடம் சில போட்டிகளில் என்னால் ஃபினிஷிங் செய்ய முடியவில்லை. எனவே இம்முறை அதை செய்ய வேண்டும் என்று நினைத்த எனக்கு இந்த போட்டியின் முடிவு திருப்தியை கொடுத்துள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : இன்றைய ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தல தோனி படைக்கப்போகும் வரலாற்று சாதனை – பரிசளிக்கும் ஜடேஜா

அப்போது முதல் வெற்றியைப் பற்றி ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு. “இந்த வெற்றி மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு சீசனின் முதல் வெற்றி மிகவும் முக்கியமானது. கடந்த வருடம் நாம் 5, 6 அல்லது 7 என எத்தனை தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பெற்றோம் என்பது கூட எனக்கு நினைவில்லை” என்று கூறினார்.

Advertisement