IPL 2023 : இன்றைய ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தல தோனி படைக்கப்போகும் வரலாற்று சாதனை – பரிசளிக்கும் ஜடேஜா

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை களமிறங்கிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து 5வது இடத்தில் உள்ளது. எனவே டாப் 4 இடத்திற்குள் நுழைந்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை பிடிக்கும் லட்சியத்தை கொண்டுள்ள அந்த அணி அடுத்ததாக ஏப்ரல் 12ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. குறிப்பாக தன்னுடைய கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு சென்னை வெற்றி பெறுமா என்று தமிழக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

முன்னாதாக 2008ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கப்பட்ட போது மும்பைக்கு சச்சின், கொல்கத்தாவுக்கு கங்குலி, பெங்களூருவுக்கு டிராவிட் என அந்தந்த மாநில ஜாம்பவான்கள் கேப்டனாக செயல்பட்ட நிலையில் தமிழகத்தில் அந்த சமயத்தில் அந்த மாதிரியான வீரர் இல்லாததால் 2007 டி20 உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த ராஞ்சியை சேர்ந்த தோனியை சென்னை நிர்வாகம் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி கேப்டனாக நியமித்தது. அப்போதிலிருந்தே இந்தியாவைப் போலவே மிகச் சிறப்பாக மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சென்னையை சிறப்பாக வழி நடத்தி வரும் தோனி 4 ஐபிஎல் கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார்.

மாபெரும் சாதனை:
இருப்பினும் 2013இல் கேப்டனாக பொறுப்பேற்று 2020க்குள் 5 கோப்பைகளை மும்பைக்கு வென்று கொடுத்த ரோகித் சர்மா வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். ஆனால் இதுவரை 146 போட்டிகளில் 80 வெற்றிகளை 56.16% என்ற சராசரியில் ரோகித் சர்மா பதிவு செய்துள்ளார். மறுபுறம் 213 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள தோனி 125 வெற்றிகளை 58.96% என்ற சராசரியில் பதிவு செய்துள்ளார். அது போக சென்னையை கேப்டனாக வழி நடத்திய 13 சீசனங்களில் 11 முறை தோனி பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

MI vs CSK Ms Dhoni Rohit Sharma

அந்த வகையில் என்னதான் ரோகித் சர்மா 5 கோப்பைகளை வென்றிருந்தாலும் வெற்றி சராசரி மற்றும் பிளே ஆப் சுற்று ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக தோனி சாதனை படைத்துள்ளார். அப்படி மொத்தமாக இதுவரை கேப்டன்ஷிப் செய்துள்ள 213 போட்டிகளில் 2016ஆம் ஆண்டு புனே அணியை வழி நடத்திய 14 போட்டிகளை தவிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதுவரை தோனி 199 போட்டிகளில் கேப்டனாக தலைமை தாங்கியுள்ளார்.

- Advertisement -

அதில் 78 தோல்விகளையும் 120 வெற்றிகளை 60.60% என்ற சிறப்பான சராசரியில் பதிவு செய்துள்ள தோனி இன்று ராஜஸ்தானுக்கு எதிராக சென்னையை 200வது போட்டியில் கேப்டனாக வழி நடத்த உள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு 200 போட்டிகளில் தலைமை தாங்கிய முதல் கேப்டன் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை இன்று தோனி படைக்க உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா மும்பைக்கு 146* போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 2வது இடத்தில் உள்ளார்.

Jadeja

ஏற்கனவே 41 வயதை கடந்துள்ள தோனி இந்த சீசனில் கடைசியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தமாக சேர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டாடி வருகிறார்கள். அந்த நிலையில் இந்த அபார சாதனை படைக்கும் தோனி தலைமையில் முடிந்தளவு சிறப்பாக செயல்பட்டு வெற்றி பரிசளிப்போம் என்று ரவீந்திர ஜடேஜா நேற்றைய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:IPL 2023 : 4 மேட்ச் கூட முழுசா விளையாடல, பேசாம என்சிவி’வில் வீடு வாங்கி குடி போயிருங்க – சிஎஸ்கே வீரரை விளாசும் சாஸ்திரி

“சென்னை அணிக்காக மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட்க்கும் அவர் ஒரு லெஜெண்ட் என்று சொல்வதை தவிர்த்து வேறு நான் என்ன சொல்ல முடியும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். கேப்டனாக 200வது போட்டியில் செயல்படும் அவருக்கு வெற்றியை நாங்கள் பரிசளிப்போம் என்று நம்புகிறேன். மேலும் கடந்த 2 போட்டியில் பெற்ற வெற்றி நடையை இப்போட்டிலும் தொடர்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்” என கூறினார்.

Advertisement