வீடியோ : டெய்லி கெட்ட வார்த்தையில் திட்டுவேன், கேப்டனே நீங்க தான் பய்யா – சிரிக்க வைக்கும் கில், இஷான், ரோகித் பேட்டி

- Advertisement -

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. ஜனவரி 18ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 349/8 ரன்கள் குவித்து மிரட்டியது. இந்தியாவுக்கு ரோகித் சர்மா 34, விராட் கோலி 8, இசான் கிசான் 5, சூரியகுமார் யாதவ் 31, ஹர்திக் பாண்டியா 28 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கி நியூசிலாந்து பவுலர்களை நங்கூரமாக எதிர்கொண்ட சுப்மன் கில் 19 பவுண்டரி 9 சிக்சருடன் 208 (149) ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். அதைத்தொடர்ந்து 350 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு ஃபின் ஆலன் 40, டேவோன் கான்வே 10, ஹென்றி நிக்கோலஸ் 18, டார்ல் மிட்சேல் 9, கேப்டன் டாம் லாதம் 24, கிளன் பிலிப்ஸ் 11 என முக்கிய வீரர்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ருசிகர பேட்டி:
அதனால் 131/6 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கிய நியூசிலாந்துக்கு 7வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெறித்தனமாக போராடிய மிட்சேல் சாட்னர் 57 (45) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் அவுட்டானாலும் மறுபுறம் 12 பவுண்டரி 10 சிக்சருடன் சதமடித்து 140 (78) ரன்களை வெளுத்து வாங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் கடைசி ஓவரில் அவுட்டானார். அதனால் தப்பிய இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இந்தியாவின் வெற்றிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய நிலையில் இரட்டை சதமடித்த சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது வென்றார்.

அப்படி பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியின் முடிவில் இந்தியாவுக்காக ஏற்கனவே இரட்டை சதமடித்த கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிசான் ஆகியோருடன் லேட்டஸ்டாக இரட்டை சதமடித்துள்ள சுப்மன் கில் இணைந்து பேட்டி கொடுக்க அணி நிர்வாகம் பிரத்தியேக ஏற்பாடு செய்திருந்தது. அந்த பேட்டியில் ஹோட்டல் அறையில் இஷான் கிசான் தினமும் தம்மை தூங்க விடாமல் அதிக சத்தத்துடன் தொலைக்காட்சியில் திரைப்படங்களைப் பார்த்து தொல்லை கொடுக்கும் போது மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டுவேன் என்று சுப்மன் கில் வெளிப்படையாக பேசினார்.

- Advertisement -

அதே பேட்டியில் கடைசியாக இரட்டை சதமடித்திருந்தும் அதன் பின் நீங்கள் ஏன் 3 போட்டியில் விளையாடவில்லை? என்று இசான் கிசானிடம் ரோகித் சர்மா கேள்வி எழுப்பினார். அவருக்கு கேப்டனாக நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் பைய்யா என்று அவர் பதிலளித்தார். அந்த ருசிகரமான உரையாடல் பின்வருமாறு.

இஷான் கிசான்: நான் அவருக்காக (கில்) ஒரு கேள்வி வைத்திருக்கிறேன். ஒவ்வொரு போட்டிக்கும் தயாராக உங்களது திட்டங்கள் என்ன?
அப்போது குறுகிட்ட ரோகத் சர்மா பேசியது: நீங்கள் இருவருமே ஒரே அறையில் தங்கியிருக்கிறீர்கள் என்பதால் நிச்சயமாக இது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே

- Advertisement -

அதற்கு கில் பதிலளித்தது: போட்டி துவங்குவதற்கு முன்பாக நான் செய்ய வேண்டிய திட்டங்களை இஷான் கிசான் என்னை தூங்க விடாமல் எப்போதுமே கெடுத்து விடுவார். ஏனெனில் அவர் ஹெட் போன்களை போட்டுக் கொள்ளாமல் அதிக சத்தத்துடன் தொலைக்காட்சியில் படம் பார்ப்பார். அதற்காக அவரை நான் கெட்ட வார்த்தைகளால் திட்டி சத்தத்தை குறைக்குமாறு சொல்வேன். ஆனால் அதற்கு அவர் இது என்னுடைய அறை என்பதால் இங்கு நான் வைத்தது தான் சட்டம் என்று சொல்வார். அந்த வகையில் அவருடன் நான் தினமும் சண்டையிடுவேன். இதுதான் போட்டிக்கு முந்தைய என்னுடைய திட்டமாகும்.

இஷான் கிசான்: அனேகமாக நீங்கள் என்னுடைய அறையில் உறங்கியதால் என்னுடைய ரன்களை இன்று அடித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்
ரோஹித் சர்மா: இஷான் நீங்கள் ஏன் 200 ரன்கள் அடித்தும் அடுத்த 3 போட்டிகளில் விளையாடவில்லை?
இஷான் கிசான்: பைய்யா கேப்டனே நீங்கள் தானே

இதையும் படிங்க: IND vs NZ : விராட் கோலி சொல்லி தான் நான் அந்த கடைசி பந்தினை அப்படி போட்டேன் – ஷர்துல் தாகூர் வெளிப்படை

என்று சொன்ன போது ரோகித் சர்மா சிரித்தது போலவே ரசிகர்களும் சிரிக்கின்றனர். மேலும் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய பிடித்திருக்கிறதா என்று ரோஹித் கேட்டதற்கு மிகவும் பிடித்துள்ளதாக இசான் கிசான் பதிலளித்தார்.

Advertisement