IND vs NZ : விராட் கோலி சொல்லி தான் நான் அந்த கடைசி பந்தினை அப்படி போட்டேன் – ஷர்துல் தாகூர் வெளிப்படை

Shardul-Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் என்கிற பெரிய ரன் குவிப்பை வழங்க நியூஸிலாந்து அணிக்கு 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Siraj

- Advertisement -

பொதுவாகவே 300-க்கும் மேற்பட்ட ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்படும் போது நிச்சயம் முதலில் பேட்டிங் செய்யும் அணி தான் வெற்றி பெறும். அந்த வகையில் நேற்றைய போட்டியிலும் நியூசிலாந்து அணி இலக்கை துரத்தும்போது ஒரு கட்டத்தில் 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக வெகு விரைவில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவ்வேளையில் ஏழாவது விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த மிட்சல் சான்ட்னர் மற்றும் மைக்கல் பிரேஸ்வெல் ஆகியோர் 102 பந்துகளில் 162 ரன்கள் குவித்து அபாரமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களது சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றியை நோக்கி சென்றது. அதிலும் குறிப்பாக சான்ட்னர் ஆட்டம் இழந்து வெளியேறினாலும் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய பிரேஸ்வெல் சதத்தை கடந்து வெகு விரைவாக வெற்றியை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தார்.

Shardul Thakur 1

இறுதியில் கடைசி மூன்று ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்பட்டபோது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேஸ்வெல் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்கிற போது கடைசி ஓவரை வீசிய ஷர்துல் தாகூரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய அவர் இரண்டாவது பந்தில் வொயிடு மூலம் ஒரு ரன்னை பெற்றார்.

- Advertisement -

இதனால் இறுதி ஐந்து பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. இதனால் நிச்சயம் நியூசிலாந்து அணியே இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் யார்க்கர் பந்தினை வீசி மைக்கல் பிரேஸ்வெல்லை எல்.பி.டபுள்யூ மூலம் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில்லான வெற்றியை பெற்றது. இந்நிலையில் கடைசி ஓவரை வீசிய ஷர்துல் தாகூர் அந்த கடைசி விக்கெட்டை கைப்பற்றியது எப்படி என்று போட்டி முடித்து பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : IND vs NZ : இப்படி நாங்க தோத்ததுல வருத்தமே இல்ல. இதுக்கு மேல என்ன வேணும் – தோல்வி குறித்து நியூசி கேப்டன் பெருமிதம்

இறுதி ஓவரில் பந்துவீச நான் மிகவும் பதட்டத்துடன் தான் இருந்தேன். அதேபோன்று முதல் பந்தே சிக்சர் போனதும் மேலும் பதட்டம் அடைந்தேன். ஆனாலும் விராட் கோலி என்னிடம் வந்து யார்க்கர் லென்ந்தில் பந்துவீசு நிச்சயம் விக்கெட்டை எடுத்து விடலாம் என்று எனக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் சொன்னது போலவே பந்துவீசினேன் இறுதியில் விக்கெட்டும் கிடைத்தது என ஷர்துல் தாகூர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement