IND vs NZ : இப்படி நாங்க தோத்ததுல வருத்தமே இல்ல. இதுக்கு மேல என்ன வேணும் – தோல்வி குறித்து நியூசி கேப்டன் பெருமிதம்

Tom-Latham
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது இங்கு இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Siraj 1

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக துவக்க வீரர் சுப்மன் கில் 208 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதன் பின்னர் 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இறுதிவரை போராடி கடைசியில் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இருந்து 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக மைக்கேல் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் இறுதிவரை அவர்கள் வெற்றிக்காக போராடியது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் மைக்கல் பிரேஸ்வெல் விளையாடிய இந்த இன்னிங்ஸ் ஒரு அற்புதமான இன்னிங்ஸ். ஒரு கட்டத்தில் 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த வேளையில் அவர் வந்து விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. நமது அணி இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது வெற்றியை நோக்கி அவர் கிட்டத்தட்ட அழைத்து வந்தது மிகச் சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க : IND vs NZ : மேட்சை ஜெயிச்சிட்டோம் ஆனாலும் அவரு எங்களுக்கு பயத்தை காட்டிட்டாரு – ரோஹித் பேசியது என்ன?

இறுதியில் நாங்கள் வெற்றிக்கான கோட்டை எட்ட முடியவில்லை என்றாலும் அவரது இந்த செயல்பாடு சிறப்பான ஒன்று. கிட்டத்தட்ட அவர் ஒரு கட்டத்தில் எங்களுக்கு வெற்றியை அருகில் காண்பித்து விட்டார். மைக்கல் பிரேஸ்வெல் மற்றும் சான்ர்ட்னர் அமைத்த பார்ட்னர்ஷிப் பார்ப்பதற்கு மிக அருமையாக இருந்தது என தோல்விக்கு பின்னர் டாம் லேதம் பெருமிதத்தோடு பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement