IND vs NZ : மேட்சை ஜெயிச்சிட்டோம் ஆனாலும் அவரு எங்களுக்கு பயத்தை காட்டிட்டாரு – ரோஹித் பேசியது என்ன?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இறுதி நேரத்தில் 12 ரன்கள் வித்யாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Siraj

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்ச துவக்க வீரர் சுப்மன் கில் 208 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

பின்னர் 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இறுதிவரை போராட்டத்தை வெளிப்படுத்தி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் எழுந்து 337 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக அந்த அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நியூசிலாந்து அணி சார்பாக மைக்கல் பிரேஸ்வெல் 78 பந்துகளை சந்தித்து 140 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். ஒருவேளை அவர் ஆட்டம் இழக்காமல் கடைசி பந்துவரை களத்தில் இருந்தால் நியூசிலாந்து அணி வெற்றி பெறவும் வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் :

- Advertisement -

உண்மையிலேயே சொல்ல வேண்டுமென்றால் மைக்கில் பிரேஸ்வெல் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு பந்தையம் அவர் தெளிவாக பார்த்து அடித்தார். ஒருவேளை கடைசி கட்டத்தில் எங்களால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை என்றிருந்தால் முடிவு மாறி இருக்கலாம். நல்ல வேலை இறுதியில் அனைத்தும் எங்களுக்கு சாதகமாக அமைந்தது.

இதையும் படிங்க : வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டனாக எம்எஸ் தோனி படைத்துள்ள 5 உலக சாதனைகள்

டாசின் போதே நான் சொன்னது ஒரு விஷயம் தான். முதலில் பேட்டிங் செய்து எங்களுக்கு நாங்களே சவாலை எதிர்கொள்ள விரும்பினோம். அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடிய வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement