வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டனாக எம்எஸ் தோனி படைத்துள்ள 5 உலக சாதனைகள்

Dhoni world cup
Advertisement

கிரிக்கெட்டில் அணியின் வழி நடத்தும் கேப்டனின் வேலை மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில் இதர 10 வீரர்களின் திறமையை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பும் ஆதரவும் கொடுப்பதுடன் மோசமான நேரங்களில் அரவணைத்து தாமும் கேப்டனாக முன்னின்று பொறுப்புடன் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதுபோக ஒரு வருடத்திற்கு பின்னர் நடைபெறப்போகும் உலக கோப்பைக்கு யாரை தேர்வு செய்யலாம் மற்றும் களத்தில் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது அழுத்தமான நேரத்தில் சரியான முடிவை எடுப்பது போன்றவற்றை கேப்டனாக இருப்பவர் தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

Dhoni

மேலும் முக்கிய தருணத்தில் எதிரணி வீரர்கள் சவாலை கொடுக்கும் போது அவரை எப்படி சாய்க்கலாம் என்று அவர்கள் யோசிக்காத திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். இவை அனைத்தையும் உள்ளூர் கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத போதிலும் அபாரமாக செய்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இந்தியா மட்டுமல்லாது உலக வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக செயல்பட்டவர்.

- Advertisement -

கூடவே விக்கெட் கீப்பிங், பினிஷிங் போன்ற எக்ஸ்ட்ரா வேலைகளையும் அற்புதமாக செய்த அவர் இந்திய கிரிக்கெட்டை புதிய பரிணாமத்திற்கு எடுத்துச் செல்ல கடவுளால் அனுப்பப்பட்டவர் என்று சொல்லலாம். ஏனெனில் அதை அனைத்தையும் அற்புதமாக செய்து 2007இல் யாருமே எதிர்பாராத வகையில் டி20 உலக கோப்பையை வென்ற தோனி அதே வருடம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 50 ஓவர் உலகக் கோப்பையில் சந்தித்த படுதோல்வியின் காயத்தால் தவித்த இந்தியாவுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் மாபெரும் மருந்து போட்டார்.

MS Dhoni Kapil Dev World Cup

மகத்தான கேப்டன்:
அத்துடன் சச்சின், ட்ராவிட் உட்பட அனைத்து சீனியர்களையும் அபாரமாக வழிநடத்திய அவர் 2009இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியாவை நம்பர் ஒன் அணியாக முன்னேற்றி கௌரவம் மிக்க டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கையிலேந்திய முதல் இந்திய கேப்டனாக சரித்திரம் படைத்தார். அதே போல் தனது குரு கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 2011இல் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்று இந்தியாவின் 28 வருட உலகக்கோப்பை தாகத்தை தனித்த அவர் 2013இல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா உள்ளிட்ட வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றார்.

- Advertisement -

அதனால் கபில் தேவ், கங்குலி உள்ளிட்ட வரலாற்றின் மகத்தான கேப்டன்களை மிஞ்சிய அவர் சிறந்த இந்திய கேப்டனாக சாதனை படைத்தார். ஆனால் தாம் வெளியேறும் போது அடுத்த தலைமுறையை சிறப்பாக அமைத்துக் கொடுப்பதே கேப்டனின் உண்மையான வேலையாகும். அதை 2011 உலகக்கோப்பை வென்றதுமே முக்கிய சீனியர் வீரர்களை கழற்றி விட்டு இன்றைய இந்திய அணியில் விளையாடும் 70% வீரர்களுக்கு அப்போதே வாய்ப்பளித்து வளர்த்த தோனி வருங்காலத்தையும் சிறப்பாக கட்டமைத்த பெருமைக்குரியவர்.

அதனாலேயே இந்தியாவின் மகத்தான கேப்டன் என்று போற்றப்படும் சௌரவ் கங்குலி தனது மாணவனான தோனி “கேப்டனாக ஆவதற்காகவே பிறந்தவர்” என்று ஏற்கனவே பாராட்டியுள்ளார். அத்துடன் 2010 ஐபிஎல் பைனலில் அச்சுறுத்தலை கொடுத்த பொல்லார்ட்டை நேர் திசையில் யாருமே நினைக்காத பீல்டரை வைத்து அவுட்டாக்கிய அவர் ஓய்வுக்கு பின் “பீல்டிங் செய்வது பற்றி புத்தகம் எழுத வேண்டும்” என்று கங்குலி கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

அந்தளவுக்கு கேப்டனாக தோனியின் மகத்துவத்தையும் சாதனைகளையும் இந்த ஒரு பதிவில் அடக்க முடியாது என்றே சொல்லலாம். எனவே கேப்டனாக அவருடைய டாப் 5 உலக சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

Trophies Won By MS Dhoni

1. அனைத்து கோப்பைகள்: சர்வதேச கிரிக்கெட்டில் டி20 உலக கோப்பை (2007), டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை (2009), 50 ஓவர் உலகக் கோப்பை (2011), மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய அனைத்து விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக தோனி மகத்தான சாதனை படைத்துள்ளார். அவரை தவிர்த்து ரிக்கி பாண்டிங் உட்பட வேறு எந்த கேப்டனும் அனைத்து கோப்பைகளையும் வென்றதில்லை. வருங்காலங்களில் வெல்வதும் கடினமாகும்.

- Advertisement -

2. அதிக போட்டிகள்: பொதுவாக காலங்களையும் விமர்சனங்களையும் கடந்து அதிக வருடங்கள் கேப்டன்ஷிப் செய்வது மிகப்பெரிய சவாலாகும். ஆனால் 2007 முதல் 2017 முதல் 60 டெஸ்ட், 70 டி20, 200 ஒருநாள் என மொத்தம் 332 போட்டிகளில் இந்தியாவை வழி நடத்திய தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளுடன் உள்ளார்.

Ponting-1

3. டி20 நாயகன்: அதே போல் 2007, 2009, 2010, 2012, 2014, 2016 ஆகிய 6 டி20 உலக கோப்பைகளில் கேப்டனாக செயல்பட்ட தோனி உலகிலேயே அதிக டி20 உலக கோப்பைகளில் கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

4. பைனல் நாயகன்: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பலதரப்பு தொடர்களின் பைனலில் கேப்டன்ஷிப் செய்து அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற உலக சாதனையும் தோனி படைத்துள்ளார். 2011 உலகக்கோப்பை உட்பட ஒருநாள் கிரிக்கெட்டில் 6 முறை பலதரப்பு அணிகள் பங்கேற்ற தொடரில் இந்தியாவை பைனலுக்கு அழைத்துச் சென்ற அவர் 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நான் அதை செஞ்சு நேரத்தை வேஸ்ட் பண்ண மாட்டேன், நேர்மையான வழில தான் ஜெய்ப்பேன் – அர்ஜுன் டெண்டுல்கர் அதிரடி

5. கீப்பர் கேப்டன்: மேலும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு அதிக ரன்களை குவித்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். மொத்தம் 60 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவர் 3454 ரன்களை குவித்து இந்த இரட்டை உலக சாதனைகளை படைத்துள்ளார்.

Advertisement