நான் அதை செஞ்சு நேரத்தை வேஸ்ட் பண்ண மாட்டேன், நேர்மையான வழில தான் ஜெய்ப்பேன் – அர்ஜுன் டெண்டுல்கர் அதிரடி

Arjun Tendulkar 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆரம்பம் காலம் முதலே பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பாக எதிர்ப்புறமிருந்து பேட்ஸ்மேன் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினால் ரன் அவுட் செய்வதற்கான விதிமுறை இருந்து வருகிறது. அதை ஒருமுறை இந்திய வீரர் வினோ மன்கட் செய்ததிலிருந்து அவரது பெயருடன் அழைக்கப்பட்டு வந்த அந்த வகையான அவுட் நேர்மைக்கு புறமானதாக பார்க்கப்பட்டு வந்தது. இருப்பினும் பவுலர்கள் மட்டும் ஒரு இன்ச் காலை வெளியே வைத்து போட்டால் அதற்கு உடனடி தண்டனையாக நோபால் வழங்கி ஃபிரீ ஹிட் வழங்கும் போது பேட்ஸ்மேன்கள் மட்டும் பந்து வீசுவதற்கு முன்பே வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்ற கண்ணோட்டத்துடன் தமிழக வீரர் அஷ்வின் 2019 ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரை மன்கட் செய்தார்.

Ashwin Buttler Mankad

அதற்காக உலக அளவில் விமர்சனங்களை சந்தித்த அவர் எதற்கும் அஞ்சாமல் விதிமுறைக்கு உட்பட்டு நடந்தேன் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததுடன் உலகின் அனைத்து பவுலர்களும் அதை தைரியமாக செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையில் நியாயமிருந்ததால் மன்கட் அவுட்டை நேர்மைக்கு புறம்பான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவிற்கு கடந்த வருடம் லண்டனின் எம்சிசி அமைப்பு மாற்றியதை ஐசிசியும் ஏற்றுக் கொண்டது. ஆனாலும் அதன் பின் சார்லி டீனை இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அந்த வகையில் ரன் அவுட் செய்தது மீண்டும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

- Advertisement -

நேரத்தை வீணாடிக்க மாட்டேன்:
மேலும் அந்த வகையில் சமீபத்தில் பிக்பேஷ் தொடரில் ஆடம் ஜாம்பா ரன் அவுட் செய்த போது கற்பனை 90 டிகிரி கோட்டை தாண்டி விட்டார் என்பதற்காக நடுவர் அவர் கொடுக்காததும் சமீபத்தில் இலங்கை தொடரில் 98 ரன்களில் இருந்த போது கேப்டன் சனாகாவை முகமத் ஷமி செய்த ரன் அவுட்டை கேப்டன் ரோகித் சர்மாவே வாபஸ் பெற்றதும் நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் என்ன தான் மன்கட் ரன் அவுட் விதிமுறைக்கு உட்பட்டதாக இருந்தாலும் அது நேர்மையாக கிரிக்கெட்டை விளையாட கற்றுக்கொள்ள துவங்கும் இளம் குழந்தைகள் மற்றும் வீரர்களின் மனதிலும் நெஞ்சத்திலும் நஞ்சை விதைப்பதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன.

Shami Mankad Rohit Sharma

இந்நிலையில் மன்கட் ரன் அவுட்டை தாம் ஆதரிப்பதாக தெரிவிக்கும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அதற்காக களத்தில் அதை செய்து தமது நேரத்தை வீணடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். ஒரு இளம் கிரிக்கெட் வீரராக அது விதிமுறைக்கு உட்பட்டதாகவே இருப்பதால் அந்த வகையான அவுட்டை தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்கும் அவர் அதற்காக அதை களத்தில் செய்யப்போவதில்லை என்று வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பேசியது பின்வருமாறு. “மன்கட் செய்வதற்கு நான் முழுவதுமாக எனது ஆதரவை தெரிவிக்கிறேன். அது அடிப்படை விதிமுறையாகும். சிலர் அது நேர்மைக்கு புறம்பானது என்று விமர்சிப்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் நான் அதை செய்ய மாட்டேன். குறிப்பாக பந்து வீசுவதற்காக வேகமாக ஓடி வரும் நான் திடீரென நின்று பெய்ல்ஸை நீக்கி அவுட் செய்ய மாட்டேன்”

aarjuntendulkar

“அப்படி செய்வதற்கு அதிகப்படியான மெனக்கடல் தேவைப்படுவதுடன் அதை செய்து என்னுடைய எனர்ஜியையும் நேரத்தையும் நான் வீணடிக்க விரும்பவில்லை. அவுட் செய்வதற்கு பல வழிகள் உள்ளது. ஆனால் எனது அணியில் உள்ள வீரர் அதை செய்தால் நிச்சயமாக அதற்கு நான் ஆதரவு கொடுப்பேன்” என்று வித்தியாசமான கருத்தை தெரிவித்தார்.

இதையும் படிங்க: IND vs NZ : 7 ஆவது வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு பயம்காட்டிய நியூசி வீரர் – பிரமாண்ட சாதனை

முன்னதாக ஜாம்பவான் மகன் என்பதால் விளையாடுவதற்கு முன்பே நிறைய விமர்சனங்களை சந்தித்து வரும் அர்ஜுன் டெண்டுல்கர் தந்தையின் பரிந்துரை இல்லாமல் மும்பை அணியிலிருந்து வெளியேறிய கோவா அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடத் துவங்கியுள்ளார். அதில் முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்த அவர் 3 விக்கெட்டுகளையும் எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அந்த வகையில் உள்ளூர் கிரிக்கெட்டில் உழைக்கத் துவங்கியுள்ள அவர் விரைவில் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காகவும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement