IND vs NZ : 7 ஆவது வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு பயம்காட்டிய நியூசி வீரர் – பிரமாண்ட சாதனை

Bracewell
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் நியூசிலாந்து அணியின் போராட்டம் அனைவரது மத்தியிலும் பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் என்கிற இமாலய ரன் குவிப்பை வழங்கியதால் 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Siraj

- Advertisement -

அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே இருந்தே சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஒரு கட்டத்தில் 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 50 ஓவர்களை பூர்த்தி செய்யாமல் வெகு விரைவிலேயே தங்களது இன்னிங்சை முடித்துக் கொள்ளும் என்று அனைவரும் நினைத்திருப்பார்கள்.

ஆனால் அந்த நேரத்தில் ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நியூசிலாந்து அணியின் வீரர்களான பிரேஸ்வெல் மற்றும் மிட்சல் சான்ட்னர் ஆகியோர் அமைத்த பாட்னர்ஷிப் இந்திய அணிக்கு ஒரு கட்டத்தில் பயத்தை காட்டியது என்று கூறலாம். ஏனெனில் ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அவர்கள் 102 பந்துகளில் 162 ரன்கள் குவித்து அசத்தினர். அப்போது 57 ரன்கள் எடுத்த நிலையில் சான்ட்னர் ஆட்டம் இழந்து வெளியேற நியூசிலாந்து அணி 293 ரன்களை குவித்து இருந்தது.

வெற்றிக்கு இன்னும் 57 ரன்கள் என்று இருந்த நிலையில் இறுதிவரை போராடிய மைக்கேல் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 140 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்தார். ஒருவேளை அவர் கடைசி பந்து வரை களத்தில் இருந்தால் நிச்சயம் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்க கூட வாய்ப்பு இருந்தது. அந்த அளவிற்கு அவர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பயத்தை காண்பித்தார்.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி அவர் அடித்த இந்த 140 ரன்கள் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பிரம்மாண்டமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன்படி ஏழாவது வீரராக களமிறங்கி ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக நியூசிலாந்து அணியைச் சேர்ந்த லுக் ரோஞ்சி இலங்கை அணிக்கு எதிராக 170 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க : IND vs NZ : மீண்டும் வெறித்தனத்தை காட்டிய முகமது சிராஜ். தரமான சம்பவம் – என்ன நடந்தது?

அதேபோன்று மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் நியூசிலாந்து அணிக்கு எதிராக 146 ரன்கள் அடித்திருந்தார். இவ்வேளையில் தற்போது அந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் களமிறங்கி இந்திய அணிக்கு எதிராக அவர் 140 ரன்கள் குவித்து 7-ஆவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை இலங்கை வீரர் திசரா பெரேரா உடன் பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement