IND vs NZ : மீண்டும் வெறித்தனத்தை காட்டிய முகமது சிராஜ். தரமான சம்பவம் – என்ன நடந்தது?

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஹைதராபாத் நகரில் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இறுதி ஓவர் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

Siraj 2

- Advertisement -

அதன்படி இன்று ஐதராபாத் நகரில் துவங்கிய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் சுப்மன் கில் 208 ரன்கள் அடித்து அசத்தினார்.

அதனை தொடர்ந்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து அணியானது பெரிய போராட்டத்திற்கு மத்தியில் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 337 ரன்கள் குறித்தது. இதன் காரணமாக இறுதியில் நியூசிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது.

Siraj 1

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 10 ஓவர்கள் வீசி 2 மெயின்கள் உட்பட 46 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

ஏற்கனவே இலங்கை அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த கடைசி ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் போன முகமது சிராஜ் இந்த போட்டியிலும் கிட்டத்தட்ட ஐந்தாவது விக்கெட்டை நெருங்கிய வேளையில் நான்கு விக்கெட்டோடு தனது பந்துவீச்சை முடித்துக் கொண்டார்.

இதையும் படிங்க : IND vs NZ : 7 ஆவது வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு மரண பயத்தை காட்டிய நியூசி வீரர் – த்ரில் வெற்றி எப்படி?

ஹைதராபாத் தான் அவரது சொந்த நகரம் என்பதனால் அவரது சொந்த ஊரிலேயே மிகச் சிறப்பான தரமான சம்பவத்தை அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக செய்து காண்பித்தார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சுக்கு மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்கள் மட்டுமின்றி இந்த போட்டியை கண்ட பல ரசிகர்களும் சமூகவலைதளத்தில் மூலம் பாராட்டுகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement