IND vs NZ : 7 ஆவது வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு மரண பயத்தை காட்டிய நியூசி வீரர் – த்ரில் வெற்றி எப்படி?

IND vs NZ Siraj Bracewell
- Advertisement -

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவக்கிய இந்தியா அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது. அந்த பயணத்தில் அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா ஜனவரி 18ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில்லுடன் 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 34 (38) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 8 (10) ரன்னிலும் இஷான் கிசான் 5 (12) ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 4வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 31 (26) ரன்களும் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 5வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 28 (38) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 12, சர்துள் தாகூர் 3 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் வெளுத்து வாங்கிய சுப்மன் கில் ஹாட்ரிக் சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 19 பவுண்டரி 9 சிக்சர்களுடன் 208 (149) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் அவுட்டானார். அவரது ஆட்டத்தால் இந்தியா 50 ஓவர்களில் 349/8 ரன்கள் குவித்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் மற்றும் ஷிப்லே தலா 2 விக்கெட்கள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 350 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு தொடக்க வீரர்கள் டேவோன் கான்வே 10 (16) ரன்னில் அவுட்டான நிலையில் அதிரடி காட்ட முயன்ற ஃபின் ஆலன் 40 (39) ரன்களில் தாகூரிடம் ஆட்டமிழந்தார். அப்போது வந்த ஹென்றி நிக்கோலஸ் 18, டார்ல் மிச்சல் 9 என முக்கிய பேட்ஸ்மேன்கனை குல்தீப் யாதவ் தனது சுழலில் சொற்ப ரன்களில் காலி செய்த நிலையில் அதிரடி வீரர் கிளன் பிலிப்ஸை 11 ரன்களில் முகமது ஷமி அவுட்டாக்கினார்.

- Advertisement -

போதாகுறைக்கு கேப்டன் டாம் லாதமை 24 ரன்களில் முகமது சிராஜ் காலி செய்ததால் 135/6 என சரிந்த நியூசிலாந்து மேலும் தடுமாறியது. அந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த மைக்கேல் பிரேஸ்வெல் – மிட்சேல் சாட்னர் ஆகியோர் நிதானம் வேலையாகாது என்று முடிவெடுத்து அதிரடியாக ரன்களை சேர்த்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தனர். மிடில் ஓவர்களில் தொல்லை கொடுக்கும் வகையில் செயல்பட்ட அந்த ஜோடியில் பிரேஸ்வெல் சற்று அதிரடியாக விளையாடி அரை சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு அச்சுறுத்தலை கொடுத்தார்.

நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்தி இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடியில் வெறித்தனமாக விளையாடிய பிரேஸ்வெல் சதமடித்து நிலையில் எதிர்ப்புறம் மிட்சேல் சாட்னர் அரை சதம் கடந்ததால் வெற்றியை நெருங்கிய நியூசிலாந்துக்கு கடைசி 5 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பந்து வீசிய முகமது சிராஜ் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 57 (45) ரன்கள் எடுத்த மிட்சேல் சாட்னரை அவுட் செய்து 7வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியை உடைத்து அடுத்து வந்த சிப்லேவே கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அந்த நிலையில் வந்த லாக்கி பெர்குசன் 8 (7) ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் மைக்கேல் பிரேஸ்வெல் வெளுத்து வாங்கியதால் வெற்றியை நெருங்கிய நியூசிலாந்துக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. ஷார்துல் தாகூர் வீசிய அந்த ஓவரில் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்ட பிரேஸ்வெல் இந்திய அணிக்கு மிகப்பெரிய பயத்தை காட்டினார். ஆனால் மனம் தளராமல் அடுத்த பந்தில் ஒயிட் போட்ட தாக்கூர் அதற்கடுத்த பந்தில் எல்பிடபிள்யூ முறையில் 12 பவுண்டரி 10 சிக்ஸருடன் கொடுத்த பிரேஸ்வெலை 140 (78) ரன்களில் அவுட்டாக்கினார்.

அதனால் நியூசிலாந்தை 337 ரன்களுக்கு அவுட்டாக்கிய இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இப்போட்டியில் பேட்டிங்கில் கில் தவிர்த்து இதர பேட்ஸ்மேன்கள் 50 ரன்கள் கூட எடுக்க தவறியது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது.

இதையும் படிங்க: IND vs NZ : ஷர்துல் தாகூர் செய்த தியாகத்தால் இரட்டை சதத்தை பூர்த்தி செய்த சுப்மன் கில் – இதை கவனிச்சீங்களா?

அதே போல் பந்து வீச்சில் ஆரம்பத்தில் அசத்திய இந்தியா மிடில் ஓவர்களில் வெற்றி உறுதியான மிதப்பில் சற்று கவனக்குறைவாக செயல்பட்டாலும் கடைசியில் துல்லியமாக செயல்பட்டு வெற்றி பெற்றது. மறுபுறம் கடைசி வரை வெற்றிக்கு போராடிய பிரேஸ்வெல் இந்திய ரசிகர்களின் மனதை வென்றார்.

Advertisement