வீடியோ : ரசிகருக்கு ரோஜாப்பூ கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா – என்ன சொன்னார்னு தெரிஞ்சா சிரிப்பிங்க

Rohit Fans
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெற்ற இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா பேட்டிங்கில் கடுமையாக போராடி கேஎல் ராகுல் – ரவீந்திர ஜடேஜா ஆகியோரது உதவியுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அதனால் பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் பவுலிங்க்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் அதிரடியாக பந்து வீசி இந்தியாவை வெறும் 117 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக விராட் கோலி 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு மிட்சேல் மார்ஷ் 66* ரன்களும் ட்ராவிஸ் ஹெட் 51* ரன்களும் எடுத்து 11 ஓவரிலேயே இலக்கை எட்ட வைத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற வைத்தனர். அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

ரோஹித் சேட்டை:
மறுபுறம் பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பிய இந்தியா 234 பந்துகள் வித்தியாசத்தில் தோற்று ஒருநாள் கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து அவமானத்தை சந்தித்தது. அதனால் தங்களது சொந்த மண்ணில் வலுவான அணி என்பதையும் நம்பர் ஒன் அணி என்பதையும் நிரூபிக்க கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கும் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக தனது உறவினர் திருமணத்திற்காக சென்றதால் முதல் போட்டியில் பங்கேற்காத கேப்டன் ரோகித் சர்மா 2வது போட்டியில் இந்திய அணியுடன் இணைந்து விளையாடினார்.

அந்த போட்டியில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு விமானம் வாயிலாக வந்த அவரை வழக்கம் போல நிறைய ரசிகர்கள் விமான நிலையத்திலேயே உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அங்கிருந்த சிலர் ரோகித் சர்மாவுக்கு பூக்கள் கொடுத்து வரவேற்ற நிலையில் ஒரு ரசிகர் ஒற்றை ரோஜா பூவை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தார். மேலும் அந்த மறக்க முடியாத தருணத்தை வீடியோவாக பதிவு செய்த அவர் பூ கொடுப்பதற்காக காத்திருக்கும் போதே ரோகித் சர்மா அந்த ரசிகரின் அருகில் வந்தார்.

- Advertisement -

ஆனால் அப்போது அந்த ரசிகர் பூ கொடுப்பதற்கு முன்பாக ஏற்கனவே சில ரசிகர்களிடம் பெற்று தனது கையில் வைத்திருந்த ரோஜா பூவை “இந்தா இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அந்த ரசிகரிடம் ரோஹித் சர்மா கொடுத்தார். அப்போது அந்த ரசிகர் மிகவும் நன்றி என்று ஆனந்தமாக தெரிவித்ததார். ஆனால் அதற்கு “நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா” என்று அந்த ரசிகர்களிடம் வேடிக்கையாக விளையாட்டுக்கு கலகலப்பாக சொல்லிக் கொண்டே ரோகித் சர்மா அங்கிருந்து சென்றார்.

அந்த ஆனந்தத்துடன் அந்த ரசிகர் பதிவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் ஒரு ரசிகரிடம் இப்படியா சொல்வது என்று சிரிப்பதுடன் ரசிகர்களிடம் பாகுபாடின்றி விளையாட்டாக பழகும் கேப்டன் ரோகித் சர்மாவை மனதார பாராட்டுகிறார்கள். இதைத்தொடர்ந்து சமனில் இருக்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22ஆம் தேதியன்று தமிழகத்தின் தலைநகரான சிங்கார சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:50 ஓவர் உலககோப்பை தொடரில் கண்டிப்பா அந்த பையனை சேக்கனும். ஆதரவு தெரிவித்த – சுரேஷ் ரெய்னா

அதில் வென்று கோப்பையை வெல்ல போராட காத்திருக்கும் இந்திய அணிக்கு நீண்ட நாட்கள் கழித்து தங்களது ஊரில் விளையாடுவதால் உற்சாகமான வரவேற்பும் ஆதரவும் கொடுக்க தமிழக ரசிகர்களும் தயாராகியுள்ளனர்.

Advertisement