50 ஓவர் உலககோப்பை தொடரில் கண்டிப்பா அந்த பையனை சேக்கனும். ஆதரவு தெரிவித்த – சுரேஷ் ரெய்னா

Raina
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 50 உலகக் கோப்பை தொடரை வென்ற பிறகு எந்த ஒரு ஐசிசி தொடரையும் கைப்பற்றாமல் உள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரை இந்திய மண்ணில் மீண்டும் கைப்பற்றி சாம்பியனாக வேண்டும் என்பதே ரசிகர்கள் பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

IND

- Advertisement -

அதன்படி எதிர்வர இருக்கும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக தற்போது அனைத்து அணிகளுமே தங்களது அணிகளை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியும் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் எந்தெந்த வீரர்களை சேர்க்கலாம் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா உலகக்கோப்பை தொடரில் தீபக் ஹூடாவை ஆட வைக்க வேண்டும் என்றும் அதற்காக அவருக்கு இப்போதே சில வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Deepak Hooda

இது குறித்து அவர் கூறுகையில் : அதிரடி பேட்ஸ்மேனான தீபக் ஹூடா பேட்டிங் செய்வது மட்டுமின்றி ஆஃப் ஸ்பின் வீசுவதிலும் வல்லவர். பந்து வீசக்கூடிய ஆல் ரவுண்டரான அவரை டி20 உலக கோப்பையில் ஆட வைத்தாலும் அவருக்கு பவுலிங் கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

ஆனால் ஒரு நாள் போட்டிகளின் போது அவரால் நிச்சயம் பேட்டிங்கும் செய்ய முடியும், சிறப்பாக பீல்டிங் செய்ய முடியும் அதேபோன்று பகுதி நேரமாக பந்துவீசவும் முடியும். இந்திய அணியில் ஏற்கனவே சேவாக், யுவராஜ், சச்சின் போன்ற வீரர்கள் பந்து வீசும் திறன் உடையவர்கள். அதேபோன்று அவ்வப்போது நானும், யூசுப் பதானும் கூட பந்து வீசுவோம்.

இதையும் படிங்க : IND vs AUS : தோத்தது கூட பரவாயில்ல. ஆனா இப்படி தோத்து இருக்கக்கூடாது – ரசிகர்கள் வருத்தம்

இப்படி இருக்கையில் நிச்சயம் எங்களைப் போன்றே தீபக் ஹூடாவும் பந்துவீசும் திறன் உடையவர் என்று கருதுகிறேன். இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் குளிர்காலம் தொடங்கிவிடும் என்பதனால் நிச்சயம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக நமது ஆடுகளங்கள் செயல்படும். எனவே அக்சர் பட்டேல், ஜடேஜா ஆகியோருடன் தீபக் ஹூடாவையும் சேர்த்து விளையாட வைக்கலாம் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement