IND vs AUS : தோத்தது கூட பரவாயில்ல. ஆனா இப்படி தோத்து இருக்கக்கூடாது – ரசிகர்கள் வருத்தம்

Mitchell-Marsh
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று மார்ச் 19-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 26 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்த வேளையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பாக விராட் கோலி 31 ரன்கள், அக்சர் படேல் 29 ரன்களையும் குவித்தனர்.

Starc

அவர்களை தவிர்த்து வேறுயெந்த வீரரும் பெரிய அளவில் ரன்களை குவிக்காததால் இந்திய அணி பெரிய அளவில் தடுமாற்றத்தை கண்டது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 11 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவர்கள் பெற்ற இந்த அசத்தலான வெற்றியின் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Mitchell Marsh 1

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பின்னர் ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தங்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி என்னதான் சிறிய ரன்குவிப்பை வழங்கி இருந்தாலும் இந்த இலக்கினை வைத்து ஆஸ்திரேலியா அணியை கொஞ்சமாவது அழுத்தத்திற்குள் தள்ளி இருக்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பாக இந்த வெற்றி இலக்கை எட்டுவதற்குள் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளையாவது கைப்பற்றி இருக்கலாம். ஆனால் பந்துவீச்சில் துவக்கத்திலிருந்தே இந்திய அணியின் பவுலர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலியா அடித்த அந்த 121 ரன்களில் 100 ரன்கள் பவுண்டரிகள் மூலம் வந்துள்ளது.

இதையும் படிங்க : அப்றம் எதுக்கு டெக்னாலஜி யூஸ் பண்றிங்க அம்பயர் எதுக்கு? டிஆர்எஸ் விதிமுறையில் முக்கிய மாற்றத்தை கோரும் சச்சின் டெண்டுல்கர்

என்னதான் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் இதேபோன்று முழு அளவில் ஆஸ்திரேலிய அணி ஆதிகத்தை செலுத்தி பவுண்டரிகளை அடிக்க விடாமலும், சில விக்கெட்டுகளையும் எடுத்து கௌரவமான தோல்வியை சந்தித்திருக்கலாம். இப்படி படுமோசமான தோல்வி சந்தித்திருக்க கூடாது என ரசிகர்கள் தங்களது ஆதங்கங்களை வருத்தங்களாக வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement