அப்றம் எதுக்கு டெக்னாலஜி யூஸ் பண்றிங்க அம்பயர் எதுக்கு? டிஆர்எஸ் விதிமுறையில் முக்கிய மாற்றத்தை கோரும் சச்சின் டெண்டுல்கர்

Sachin Tendulkar
- Advertisement -

நூற்றாண்டுக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளாக துவங்கப்பட்ட கிரிக்கெட் நாளடைவில் ரசிகர்களை கவர்வதற்காக ஒருநாள் போட்டிகளாக அவதரித்து இன்று நவீன உலகத்தின் வேகத்திற்கேற்ப டி20 போட்டிகளாக விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது. காலத்தின் வளர்ச்சியை போலவே கிரிக்கெட் விளையாட்டும் கடந்த பல வருடங்களாக பல்வேறு பரிணாமங்களை கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. பொதுவாக கிரிக்கெட்டில் முக்கியமான பரபரப்பான தருணங்களில் வெற்றியின் தீர்மானிக்கக் கூடிய முக்கிய முடிவுகளை இரு அணிகளுக்கும் சாதகமாக இல்லாமல் நியாயத்தின் தராசு போல நின்று சமமாக வழங்க வேண்டியது நடுவர்களின் கடமையாகும். இருப்பினும் அவர்களும் மனிதர்கள் தானே என்பதால் சில தருணங்களில் தவறான முடிவுகளை வழங்குவது வாடிக்கையாகும்.

ஆனால் அதற்காக சில அம்பயர்கள் வேண்டுமென்றே தாறுமாறான முடிவுகளை கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த ஸ்டீவ் பக்னர் இந்தியாவை பார்த்தால் வேண்டுமென்றே தவறான முடிவுகளை கொடுத்து பல வெற்றிகளை தூளாக்கினார். அதே போல அவரைப் போன்ற அம்பயர்கள் 90 ரன்களில் இருந்த போது நிறைய தருணங்களில் தவறான தீர்ப்பு வழங்கியதால் சச்சின் டெண்டுல்கர் குறைந்தது 10 – 15 சதங்களை தவற விட்டிருப்பார் என்றே சொல்லலாம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே டெக்னாலஜியை பயன்படுத்தி நழுவர் வழங்கும் அதிருப்தியான தீர்ப்புகளை மறுபரிசலனை செய்யும் டிஆர்எஸ் விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

- Advertisement -

சச்சின் அதிருப்தி:
அதன் காரணமாக இப்போதெல்லாம் பெரும்பாலான சமயங்களில் சரியான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் இப்போதும் சில தருணங்களில் வீரர்களையும் ரசிகர்களையும் முட்டாளாக்கும் அளவுக்கு தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டு தான் வருகின்றன. அதை விட எல்பிடபிள்யூ முறையில் ரிவ்யூ எடுக்கும் போது பால் ட்ராக்கிங் தொழில்நுட்பத்தில் பந்து ஸ்டம்ப்பில் முழுமையாக அடிக்காமல் லேசாக உரசினால் களத்தில் இருந்த நடுவர் ஏற்கனவே என்ன தீர்ப்பு கொடுத்தாரோ (அம்பயர்ஸ் கால்) அதையே மீண்டும் 3வது நடுவர் கொடுப்பது தொடர்ந்து நிறைய விமர்சனங்களை எழுப்பி வருகிறது.

சில தருணங்களில் அது சாதகமாகவும் சில தருணங்களில் பாதகமாகவும் இருந்து வரும் நிலையில் தம்மைப் பொறுத்த வரை பந்து ஸ்டம்ப்பில் உரசினாலே அவுட் கொடுக்க வேண்டுமென்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். குறிப்பாக அந்த நேரத்தில் நடுவரை நம்பாமல் தான் டெக்னாலஜியை பயன்படுத்தும் நீங்கள் பந்து உரசுவதால் மட்டும் மீண்டும் ஏன் களத்தில் இருந்த நடுவர் கொடுக்கும் தீர்ப்பை பிரதிபலிக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது நடுவரை நம்பாமல் டெக்னாலஜியை நம்பும் நாம் இந்த விஷயத்தில் ஒரே வழியில் டெக்னாலஜியை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியதற்கு பின்வருமாறு.

- Advertisement -

“எனது காலத்தில் டிஆர்எஸ் இருந்திருந்தால் எனக்கு எதிராக வழங்கப்பட்ட சில தீர்ப்புகளை நிச்சயமாக மறுபரிசீலனை செய்திருப்பேன். அது கைவிட்டு எண்ண முடியாத அளவுக்கு இருந்ததால் நிச்சயமாக மறுபரிசீலனை செய்யும் விதிமுறையை விரும்புகிறேன். அதில் சில உங்களுக்கு சாதகமாகவும் சில பாதகமாகவும் அமையலாம். நாம் தொழில்நுட்பத்தை மட்டும் சுட்டி காட்டுகிறோம். ஆனால் அது முட்டாள்தனமானதல்ல மனிதர்களும் கூட. டிஆர்எஸ் விதிமுறை வருவதற்கு முன் பல தருணங்களில் அப்பட்டமான தவறுகள் நிகழ்ந்தன. அந்த தவறுகளால் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடிய 3வது நடுவர் உருவாக்கப்பட்டார்”

“அந்த நிலையில் தற்போதைய ஃபார்மட்டை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன். அதாவது ஒருவேளை பந்து ஸ்டம்ப்புகளை தாக்கினால் (உரசினால்) அது அவுட்டாகும். இல்லையென்றால் பேட்ஸ்மேன் தொடர்ந்து பேட்டிங் செய்யலாம். மேலும் பேட்ஸ்மேன் அல்லது பவுலர் களத்தில் இருந்து நடுவர் கொடுத்த தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை என்று நினைத்தால் தான் 3வது நடுவரை நாடுகிறார்கள்”

இதையும் படிங்க:வீடியோ : சிஎஸ்கே’வின் அடுத்த கேப்டன் அவர் தான் – ஆர்வத்தில் உண்மையை கொட்டிய சின்னத்தல சுரேஷ் ரெய்னா

“ஆனால் அந்த சமயத்தில் மீண்டும் ஏன் நீங்கள் களத்தில் இருக்கும் நடுவர் கொடுத்த முடிவை கொடுக்கிறீர்கள்? ஒருவேளை நீங்கள் டெக்னாலஜி மீது நம்பிக்கை வைத்தால் தொடர்ந்து அதே வழியில் செல்லுங்கள். ஆனால் அதை விட்டு விட்டு இரண்டையும் கலந்து முடிவெடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement