சிஎஸ்கே’வின் அடுத்த கேப்டன் அவர் தான் – ஆர்வத்தில் உண்மையை கொட்டிய சின்னத்தல சுரேஷ் ரெய்னா

Raina
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக நடைபெறுகிறது. அகமதாபாத் நகரில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை எதிர்கொள்கிறது. ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக திகழும் சென்னை கடந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியதால் இம்முறை சிறப்பாக செயல்பட்டு 5வது கோப்பையை வென்று கம்பேக் கொடுக்கப் போராட உள்ளது.

முன்னதாக 40 வயதை கடந்த தோனி வருங்காலத்தை கருத்தில் கொண்டு புதிய கேப்டனை உருவாக்குவதற்காக கடந்த வருடம் ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன்ஷிப் பதவியை கொடுத்து அவருக்கு உறுதுணையாக சாதாரண வீரராக விளையாடினார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத அழுத்தத்தால் தடுமாறிய ஜடேஜா தலைமையில் ஆரம்பத்திலேயே 4 தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை நாக் அவுட் சுற்று வாய்ப்பை இழந்தது. அதை விட கேப்டன்ஷிப் அழுத்தத்தால் ரொம்பவே தடுமாறிய அவர் அந்த பதவியை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்துக் காயமடைந்து வெளியேறினார்.

- Advertisement -

அடுத்த கேப்டன்:
தற்போது அதிலிருந்து அவர் குணமடைந்து வந்தாலும் ஏற்கனவே சென்னை மண்ணில் தமிழக ரசிகர்களுக்கு முன்னிலையில் தனது கேரியரின் கடைசி போட்டியில் விளையாடவிருப்பதாக தோனி அறிவித்துள்ளார். அதனால் 41 வயதை கடந்து விட்ட தோனி 2019க்குப்பின் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடருடன் விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் சென்னையின் அடுத்த கேப்டனாக ஏற்கனவே ஜடேஜா செட்டாக மாட்டார் என்பது நிரூபணமான நிலையில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தகுதியானவராக இருந்தாலும் முக்கிய நேரங்களில் நாட்டுக்காக விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் முழுமையாக விளையாட மாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அதன் காரணமாக ஏற்கனவே விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் மகாராஷ்டிரா அணியை கேப்டனாக வழி நடத்திய அனுபவமும் 2021 ஐபிஎல் தொடரில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பையை வென்று 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் சென்னையின் அடுத்த கேப்டனாக நீண்ட காலமாக செயல்படுவதற்கு தகுதியானவர் என்று சுனில் கவாஸ்கர் போன்ற சில முன்னாள் வீரர்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக ருதுராஜ் கைக்வாட் வர விரும்புவதாக முன்னாள் நம்பிக்கை நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் செய்தியாளர் எழுப்பிய பல கேள்விகளில் ஒன்றாக வந்த அந்த கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு. “தோனியை சுற்றி ருதுராஜ் கைக்வாட் வளர்வதை நான் விரும்புகிறேன். நல்ல கிரிக்கெட் மூளையை கொண்டுள்ள தோனி எப்போதுமே தன்னுடைய வீரர்களை சுற்றி இருப்பவர். ருதுராஜ் கைக்வாட் ஏற்கனவே சென்னை அணிக்காக மிகச்சிறந்த பங்காற்றியுள்ளார். அடுத்து வரும் போட்டிகளிலும் அவர் இந்தியாவுக்காகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சிறந்து விளங்க நான் விரும்புகிறேன். ரூட்டு உங்களுடைய கேப்டன்ஷிப் பணிக்காக எனது வாழ்த்துக்கள் பிரதர்” என்று கூறினார்.

முன்னதாக என்னதான் சென்னை அணியிலிருந்து வெளியேறினாலும் சின்னத்தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சுரேஷ் ரெய்னா இப்போதும் தோனி மற்றும் சென்னை அணி நிர்வாகத்துடன் மிகுந்த நெருக்கத்தில் இருந்து வருவதை அனைவரும் அறிவோம். குறிப்பாக தோனியின் நெருங்கிய நண்பராக இருக்கும் ரெய்னாவுக்கு நிச்சயமாக அடுத்த கேப்டன் பற்றி சென்னை அணி நிர்வாகத்தின் பின்னணியில் நடைபெறும் திட்டங்களின் முக்கிய அம்சங்கள் தெரிந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:IND vs AUS : இந்திய அணியை சாய்த்தது மட்டுமின்றி மாபெரும் சாதனையை நிகழ்த்திய – மிட்சல் ஸ்டார்க்

அந்த நிலையில் இதர முன்னாள் வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் அடுத்த கேப்டனாக வருவார் என்று தெரிவிக்கும் நிலையில் சுரேஷ் ரெய்னா மட்டும் நேரடியாக அவருக்கு கேப்டன்ஷிப் செய்வதற்கு வெளிப்படையாக வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை அணியின் மீது இப்போதும் அளவு கடந்த அன்பு வைத்துள்ள காரணத்தாலேயே ருதுராஜ் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட போவதை ஆர்வத்தில் வாழ்த்து தெரிவித்ததன் வாயிலாக சுரேஷ் ரெய்னா சொல்லாமல் சொல்லியுள்ளார் என்று இதிலிருந்து உறுதியாக கூறலாம்.

Advertisement