IND vs AUS : இந்திய அணியை சாய்த்தது மட்டுமின்றி மாபெரும் சாதனையை நிகழ்த்திய – மிட்சல் ஸ்டார்க்

Starc
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியை இழந்த ஆஸ்திரேலிய அணியானது இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பெற்றது.

Mitchell-Starc

- Advertisement -

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது ஒன்றுக்கொன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெரும் அணி இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியை 117 ரன்களுக்கு சுருட்டியது.

Starc 1

ஆஸ்திரேலிய அணி சார்பாக மிட்சல் ஸ்டார்க் 8 ஓபவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட 53 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 11 ஓவர்களில் 121 ரன்கள் குவித்து இந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பிரட் லீ மற்றும் ஷாஹித் அப்ரிடியுடன் இணைந்து ஒரு மாபெரும் சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி இந்த ஒருநாள் போட்டியில் எடுத்த 5 விக்கெட்டுகளுடன் சேர்த்து இதுவரை 9 முறை அவர் ஒரே போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : வரலாற்றில் 6 ஆவது முறையாக இந்திய பேட்ஸ்மேன்கள் படைத்த மோசமான சாதனை – விவரம் இதோ

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட் எடுத்த வீரராக வக்கார் யூனிவர் 13 முறை எடுத்து முதலிடத்திலும், முத்தையா முரளிதரன் 10 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் வேளையில் மிட்சல் ஸ்டார்க் மற்றும் பிரட் லீ ஆகியோர் மூன்றாவது இடத்தில் உள்ளனர். அதேபோன்று சாகித் அப்ரிடியும் 9 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அவர்களுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement