IND vs AUS : வரலாற்றில் 6 ஆவது முறையாக இந்திய பேட்ஸ்மேன்கள் படைத்த மோசமான சாதனை – விவரம் இதோ

Mitchell-Starc
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள திணறியது.

MItchell Starc IND vs AUS

ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்த இந்திய அணியானது 50 ஓவர்களை கூட விளையாட முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 26 ஓவர்களிலேயே அனைத்து விக்கெடுகளையும் இழந்து வெறும் 117 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக விராட் கோலி 31 ரன்கள் குவித்தார். அவரை தவிர்த்து அக்சர் பட்டேல் 29 ரன்களை குவித்திருந்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சார்பாக மிட்சல் ஸ்டார்க் அற்புதமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 11 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 121 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Virat Kohli

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி பெற்ற வெற்றியின் மூலம் இந்த தொடரானது தற்போது ஒன்றுக்கொன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs AUS : இவர் அதுக்கு சரிப்பட மாட்டார் பேசாமா ட்ராப் பண்ணுங்க – மோசமான சாதனை படைத்த சூரியகுமார், ரசிகர்கள் ஏமாற்றம்

அதன்படி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் நான்கு பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆவது இது ஆறாவது முறையாகும். இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய நான்கு வீரர்கள் இந்த போட்டியில் டக்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Advertisement