வீடியோ : டாஸ் வென்று என்ன செய்வது என்பதை மறந்து ஸ்கூல் பையன் போல உளறிய ரோஹித் சர்மா – மைதானத்தில் ஏற்பட்ட சிரிப்பலை

- Advertisement -

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதமடித்து 350 ரன்கள் குவித்தும் பந்து வீச்சில் ஆரம்பத்தில் அசத்தலாக செயல்பட்டும் கடைசி நேரத்தில் இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கிய மைக்கேல் பிரேஸ்வெல் நியூசிலாந்தை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த போராடினார். இருப்பினும் கடைசி ஓவரில் கச்சிதமாக செயல்பட்டு அதிர்ஷ்டத்துடன் வெற்றி கண்ட இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது.

அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி ஜனவரி 21ஆம் தேதியன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் ராய்ப்பூர் நகரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல் முறையாக சர்வதேச தரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் இதற்கு முன் ஐபிஎல் போன்ற உள்ளூர் போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில் முதல் முறையாக இப்போது தான் ஒரு சர்வதேச போட்டி நடைபெறுகிறது.

- Advertisement -

மறந்த ரோஹித்:
55,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானம் இந்தியாவிலேயே 3வது மிகப்பெரிய மைதானமாக உள்ளது. அதனால் சட்டீஸ்கர் மாநில ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இப்போட்டியை பார்ப்பதற்காக காலை முதலே ஆவலுடன் மைதானத்திற்கு வந்து காத்திருந்தனர். அந்த நிலைமையில் 1 மணிக்கு வழக்கம் போல டாஸ் வீசும் நிகழ்வில் போட்டியின் நடுவர் ஜவகள் ஸ்ரீநாத் மற்றும் 2 கேப்டன்கள் இருந்தனர்.

அதை காந்த குரல் நாயகன் ரவி சாஸ்திரி வழக்கம் போல தனது கனீர் குரலால் போட்டியை தொகுத்த நிலையில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் டாஸ் வீசிய கேப்டன் ரோஹித் சர்மா தலை கேட்டார். அதில் அவர் எதிர்பார்த்தது போலவே தலை விழுந்ததால் உங்களது முடிவு என்ன என்று போட்டியின் நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் கேட்டார். அப்போது திடீரென அதுவரை பேசி வைத்திருந்த அத்தனை திட்டத்தையும் மறந்த ரோகித் சர்மா பதில் சொல்ல முடியாமல் அப்படியே நின்றார். ஒரு சில நொடிகளுக்கும் மேலாக என்ன முடிவெடுத்தோம் என்பதை மறந்து விட்டு அவர் ஸ்கூல் பையனை போல் தலையில் கையை வைத்து யோசித்தார்.

- Advertisement -

அத்துடன் “ம், ஆ” என அச்சு அசல் ஸ்கூல் மாணவனை போலவே ரியாக்சன் கொடுத்த அவர் “ம், நாங்க, அது வந்து” என்று வடிவேலு பாணியில் என்ன முடிவெடுத்தோம் என்பதை மறந்து சுமார் 10 நொடிகள் முடிவை அறிவிக்க முடியாமல் தடுமாறினார். இறுதியாக நன்றாக யோசித்து கையை நீட்டிக்கொண்டே “நாங்கள் பந்து வீசுகிறோம்” என்று ஒரு வழியாக அறிவித்தார். அதை அருகிலிருந்து சிரித்துக் கொண்டே பார்த்த நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் “எப்டியோ சொல்லி முடிச்சிட்டீங்க” என்ற வகையில் கை கொடுத்தார். அதே போல போட்டி நடுவர் ஸ்ரீநாத்தும் ரோஹித்தின் தடுமாற்றத்தை பார்த்து சிரித்த வாக்கிலேயே இறுதியில் அவரது முடிவை ஏற்றுக் கொண்டு சென்றார்.

மேலும் அவர் தடுமாறியதை பார்த்து சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் கேமரா மேன் சிரித்தது போலவே மைதானத்தின் இதர பகுதிகளில் நின்று பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருந்த பாண்டியா உட்பட இந்திய வீரர்களும் திடீரென்று “கேப்டனுக்கு என்ன ஆச்சு” என்று சிரித்தார்கள். அதே போல ரசிகர்களும் சிரித்ததால் மைதானத்தில் ஒரு நிமிடம் மிகப்பெரிய சிரிப்பலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: வீடியோ : வில் யூ மேரி மீ. காவ்யா மாறனுக்கு தூது விடுத்த தெ.ஆ ரசிகர் – மைதானத்தில் கவனத்தை ஈர்த்த பதாகை

இறுதியில் அந்த தடுமாற்றத்திற்கான காரணம் என்ன என்று செய்தியாளர் கேட்ட போது ரோகித் பதிலளித்தது பின்வருமாறு. “நான் திடீரென்று என்ன செய்வது என்று முடிவெடுத்ததை மறந்து விட்டேன். ஏனெனில் போட்டிக்கு முன்பாக நாங்கள் டாஸ் முடிவு பற்றி நிறைய விவாதித்தோம்” என்று கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக விடுதலைகளில் வைரலாகி வருகிறது.

Advertisement