வீடியோ : வில் யூ மேரி மீ. காவ்யா மாறனுக்கு தூது விடுத்த தெ.ஆ ரசிகர் – மைதானத்தில் கவனத்தை ஈர்த்த பதாகை

Kavya-Maran
- Advertisement -

சன் நெட்வொர்க் உரிமையாளரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக இருக்கிறார். 30 வயதான அவர் கிரிக்கெட் மீதுள்ள ஈடுபாடு காரணமாக ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியை விலைக்கு வாங்கி தற்போது அந்த அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார். இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது ஹைதராபாத் அணியை உற்சாகப்படுத்துவதற்காக நேரில் சென்று போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்.

Kavya-maran

- Advertisement -

அதோடு காவ்யா மாறன் தங்களது அணி வீரர்களை மைதானத்தில் இருந்தவாறு உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. அதோடு சன்ரைசர்ஸ் அணி மோதும் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்கள் மட்டுமின்றி தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் கூட காவியா மாறனை வியந்து பார்த்துள்ளார்கள்.

எந்த அளவிற்கு அவரிடம் அழகு இருக்கிறதோ அதே அளவிற்கு அறிவும் அவரிடம் இருக்கிறது. அந்த வகையில் ஐபிஎல் ஏலத்தின் போது கூட மற்ற அணிகளுக்கு போட்டியாக காவ்யா மாறன் சிறப்பான சில முடிவுகளை அவராகவே எடுத்து அணியை பலப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரை போன்றே தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 லீக் தொடரில் கூட சன்ரைசர்ஸ் அணி ஈஸ்டர்ன் கேப் என்கிற ஒரு அணியை வாங்கியுள்ளது. அதற்கும் காவ்யா மாறன் தான் உரிமையாளராக இருக்கிறார். இந்நிலையில் பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது மைதானத்தில் தனது அணியை காவ்யா மாறன் வழக்கம்போல் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.

- Advertisement -

அப்போது மைதானத்தில் இருந்த ஒரு ரசிகர் செய்த செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அந்த ரசிகர் கையில் வைத்திருந்த ஒரு பதாகையில் : காவியா மாறன் “வில் யு மேரி மீ” என்று அவருக்கு ஒரு காதல் தூது விடுத்துள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : அவரு ஒரு மேட்ச் வின்னர். அவரை போயி வெளிய உட்கார வைக்குறீங்களே – கபில் தேவ் ஆதங்கம்

நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்திய சன்ரைசர்ஸ் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement