அவரு ஒரு மேட்ச் வின்னர். அவரை போயி வெளிய உட்கார வைக்குறீங்களே – கபில் தேவ் ஆதங்கம்

Kapil-Dev
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் தேர்வு குறித்த பல்வேறு விமர்சனங்கள் அடிக்கடி எழுந்து வருகின்றன. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவ் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் கூட 51 பந்துகளை சந்தித்து 112 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

Shubman and Rohit

அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி அந்த டி20 தொடரையும் கைப்பற்றியது. ஆனால் டி20 தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஒருநாள் தொடரின் போது வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் இரண்டு போட்டிகளிலும் வெளியில் அமர வைக்கப்பட்ட அவர் மூன்றாவது போட்டிக்கான அணியில் மட்டுமே சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

இப்படி டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் வீரராக இருக்கும் அவரை வெளியில் அமர வைப்பது தவறு என்று பலரும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட அவருக்கு இடம் கொடுக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக அவரை ஒருநாள் போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாகவும் உள்ளது.

Suryakumar Yadav 1

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ் கூறுகையில் : இந்திய அணியின் தேர்வுக்குழு எப்படி அணியை தேர்வு செய்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. ஏனெனில் இந்திய அணியில் தற்போது பல திறமையான வீரர்கள் தங்களது வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். தற்போது உள்ள சூழலில் இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வகையிலும் தனித்தனியாக அணியை உருவாக்க முடியும்.

- Advertisement -

அந்த அளவிற்கு இந்திய அணி தற்போது மிகச் சிறப்பாக உள்ளது. எனவே வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதேபோன்று சூரியகுமார் யாதவிற்க்கு ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தும் விஷயமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் பயமின்றி சிக்ஸருடன் இரட்டை சதத்தை விளாசிய இந்திய வீரர்கள்

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்து வருகிறார். நிச்சயம் அவரை ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் தொடர்ந்து இடம்பெற செய்ய வேண்டும். அவர் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் விளையாடினால் நிச்சயம் அது இந்திய அணிக்கு மேலும் பலத்தை தரும் என கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement