சர்வதேச கிரிக்கெட்டில் பயமின்றி சிக்ஸருடன் இரட்டை சதத்தை விளாசிய இந்திய வீரர்கள்

Rohith-1
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது அணிக்காக விளையாடும் அத்தனை பேட்ஸ்மேன்களும் சதமடித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே களமிறங்குவார்கள். ஆனால் அதற்கு தடையாக பெரும்பாலான போட்டிகளில் 3 இலக்க ரன்களை தொடுவதற்கு முன்பாகவே பவுலர்கள் அவுட்டாக்கி விடுவார்கள். எனவே அவர்களை கடந்து சதத்தை விளாசி 150 ரன்களை கடக்கும் பேட்ஸ்மேன்கள் நன்கு செட்டிலாகி ஒரு கட்டத்தில் எப்படி பந்து வீசினாலும் அதிரடியாக பவுலர்களை பறக்க விட்டு விரைவாக இரட்டை சதத்தை நெருங்கி விடுவார்கள். ஆனால் அப்போது பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அந்த உழைப்பு வீணாகி விடக்கூடாது என்ற பயத்துடன் எப்படியாவது அவுட்டாகி விடக்கூடாது என்ற சுயநலத்துடன் பதற்றமடைந்து மெதுவாக பேட்டிங் செய்ய துவங்குவார்கள்.

Rohit sehwag

- Advertisement -

குறிப்பாக 90களில் அல்லது 190களை தொடும் உலகின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அதன்பின் 10 ரன்கள் எடுப்பதற்கு உருட்டி உருட்டி சிங்கிள், டபுள் போன்ற ரன்களை எடுத்து சதங்களை தொடுவார்கள். அதிலும் சதங்களின் நாயகனாக போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் பலமுறை பதற்றமடைந்து அவுட்டாகி உலகிலேயே அதிக முறை 90களில் அவுட்டான வீரராகவும் பரிதாப சாதனை படைத்துள்ளார். ஆனால் சிலர் மட்டுமே அந்த பதற்றமான தருணத்தில் சுயநலத்தையும் பயத்தையும் தூக்கி எறிந்து விட்டு ஆனதாகட்டும் என்ற தைரியத்துடன் சிக்சர்களை அடித்து கெத்தாக பேட்டை உயர்த்துவார்கள்.

சிக்ஸருடன் இரட்டை சதம்:
வரலாற்றில் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் வீரேந்திர சேவாக் 100 ரன்களில் இருந்தாலே சிக்சர் அடித்து சதத்தைத் தொட்டு தனக்கென்று தனித்துவமான அடையாளத்தை உருவாக்கினார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக சிக்ஸருடன் அவர் அடித்த முதல் முச்சதத்தை யாராலும் மறக்க முடியாது. அது போல சர்வதேச கிரிக்கெட்டில் சிக்ஸருடன் இரட்டை சத்தத்தை தொட்ட 3 இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்.

Rohith

3. ரோஹித் சர்மா 209: கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 7வது கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடிய ரோகித் சர்மா 197 ரன்களில் இருந்த போது க்ளின்ட் மெக்கே வீசிய ஓவரில் அதிரடியான சிக்ஸர் பறக்க விட்டு தன்னுடைய முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

மொத்தமாக 208 (158) ரன்கள் குவித்த அவர் இந்தியா 50 ஓவர்களில் 383/6 ரன்கள் எடுக்க உதவி பின்னர் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி 3 – 2 (7) என்ற கணக்கில் கோப்பையை வெல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.

Rohit-2

2. ரோஹித் சர்மா 212: கடந்த 2019இல் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காந்தி – மண்டேலா டெஸ்ட் தொடரில் ராஞ்சியில் நடைபெற்ற கடைசி போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா 100 ரன்களை சிக்ஸருடன் தொட்டார். அதே வேகத்துடன் இரட்டை சதத்தை நெருங்கிய அவர் 199 ரன்களில் இருந்த போது லுங்கி நிகிடி வீசிய ஓவரில் சிக்ஸர் அடித்து இரட்டை சதத்தையும் தொட்டார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக அந்த நாள் வீரேந்திர் சேவாக் அவர்களின் பிறந்த நாளாக அமைந்தது. எனவே அவருக்கு மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு கொடுக்கும் வகையில் செயல்பட்ட ரோகித் சர்மா 212 ரன்களை விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

3. சுப்மன் கில் 208: சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் 40 ரன்கள் கூட தாண்டாத நிலையில் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்த சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக சாதனை படைத்து 208 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க: IND vs AUS : இன்னும் டெஸ்ட் தொடரே ஆரம்பிக்கல. அதற்குள் மாஸ் சாதனையை செய்த புஜாரா – விவரம் இதோ

குறிப்பாக நியூசிலாந்தின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவரான லாக்கி பெர்குசன் வீசிய 48வது ஓவரில் 182 ரன்களில் இருந்து ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு இரட்டை சதத்தை தொட்ட அவர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இறுதியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

Advertisement