IND vs AUS : இன்னும் டெஸ்ட் தொடரே ஆரம்பிக்கல. அதற்குள் மாஸ் சாதனையை செய்த புஜாரா – விவரம் இதோ

pujara
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு அடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. அதன் பிறகு இந்திய அணி பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி முதல் மார்ச் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியாவில் விளையாட இருக்கிறது.

INDvsAUS

- Advertisement -

இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று வெற்றிகளையாவது இந்திய அணி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட முடியும்.

இதன்காரணமாக இந்த டெஸ்ட் தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. அதேவேளையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ரிஷப் பண்ட் விபத்து காரணமாக இந்த ஆண்டு பெரும்பாலான போட்டியை தவற விட இருப்பதால் இந்த டெஸ்ட் தொடரையும் அவர் தவற விட இருக்கிறார். எனவே அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஏதாவது ஒரு வீரர் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் தொடரில் நிச்சயம் புஜாராவின் மீது இந்திய அணி பெரும்பான்மையான சார்பினை கொண்டிருக்கும் என்று கூறலாம்.

Pujara 1

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை புஜாரா மிகவும் அற்புதமாக விளையாட கூடியவர். அந்த வகையில் தற்போது இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே புஜாரா தற்போது இந்திய மண்ணில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரில் மாஸான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது தற்போது பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் புஜாரா ஆந்திர பிரதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 91 ரன்களை குவித்தார். அவர் 91 ரன்கள் குவித்து இருந்தாலும் அந்த அணி 150 எண்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் இந்த 91 ரன்கள் மூலம் அவர் இந்திய மண்ணில் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 12000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார்.

இதையும் படிங்க : நீங்க ஐபிஎல் விளையாட வேணாம் ஆனால் முடிஞ்சா அதை செய்ங்க – நல விசாரிப்புடன் ரிஷப் பண்ட்டுக்கு பாண்டிங் கோரிக்கை

அதோடு ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 12000 ரன்களை பூர்த்தி செய்த இரண்டாவது இந்திய வீரன் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 20 போட்டியில் பங்கேற்றுள்ள அவர் 5 சதம் மற்றும் 10 அரைசதம் என 1893 ரன்கள் குவித்துள்ள வேளையில் எதிர்வர இருக்கும் டெஸ்ட் தொடரிலும் அவரது பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement