நீங்க ஐபிஎல் விளையாட வேணாம் ஆனால் முடிஞ்சா அதை செய்ங்க – நல விசாரிப்புடன் ரிஷப் பண்ட்டுக்கு பாண்டிங் கோரிக்கை

Rishabh Pant Ricky Ponring
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் கடந்த மாதம் கார் விபத்துக்குள்ளாகி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி தற்போது சிகிச்சைகளை பெற்று வருகிறார். குறிப்பாக எலும்பு முறிவு போன்ற காயத்திலிருந்து தப்பிய அவர் அதிகப்படியான மேற்புற காயங்களை சந்தித்ததால் அதற்கு தேவையான அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டு குணமடைந்து வருகிறார். ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய அந்த நிகழ்வுக்கு பின் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் நல்லபடியாக இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து வருவேன் என்றும் தெரிவித்த ரிஷப் பண்ட் தமக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இருப்பினும் அவர் குணமடைவதற்கு குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை தேவைப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் வரும் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இடம் பெறாத ரிசப் பண்ட் 2023 ஐபிஎல் தொடரிலும் விளையாட மாட்டார் என்று அவர் விளையாடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகத்தில் இருக்கும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி சமீபத்தில் அறிவித்தார். அதே போல் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையிலும் அவர் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பாண்டிங் கோரிக்கை:
இந்நிலையில் ரிசப் பண்ட் காயத்தை பற்றி சமீபத்தில் மொபைல் போனில் அவரிடம் பேசி கேட்டறிந்ததாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் மற்றும் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். அதே போல் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் போனாலும் குறைந்தபட்சம் டெல்லி அணியுடன் தங்களைப் போன்ற பயிற்சிகளுடன் அமர்ந்து ஆதரவு கொடுப்பதே டெல்லி அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே களத்தில் விளையாடவில்லை என்றாலும் அணியுடன் இருக்குமாறு வித்தியாசமான கோரிக்கை வைக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“அவரைப் போன்ற வீரரை நீங்கள் எளிதாக மாற்ற முடியாது. அவரைப் போன்ற வீரர்கள் மரத்தில் வளர மாட்டார்கள். இருப்பினும் அவருக்கு பதிலான மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை நாங்கள் தேர்ந்தெடுக்க உள்ளோம். ஒருவேளை ஐபிஎல் தொடரில் அவரால் குணமடைந்து விளையாட முடியாமல் போனால் குறைந்தபட்சம் அணியுடன் இருந்தால் போதும். ஏனெனில் கேப்டனாக இருக்கும் அவர் அணியுடன் இருந்து சிரித்து மகிழ்ந்து இதர வீரர்களுக்கு ஆதரவு கொடுப்பதை நாங்கள் விரும்புகிறோம்”

- Advertisement -

“அவர் உண்மையில் அணியுடன் பயணம் செய்து அணியைச் சுற்றி இருக்க முடிந்தால் வாரத்தின் ஒவ்வொரு நாளும் அவர் என் அருகில் அமர்ந்திருக்க வேண்டும். மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் நாங்கள் டெல்லியில் ஒன்றுகூடி எங்கள் அணியில் வேலைகளை தொடங்கும் போது அவர் அங்கு இருக்க முடிந்தால் எனக்கு அவருடன் இருக்கும் முழு நேரமும் வேண்டும் என்று நான் நம்புகிறேன்”

“அதை நான் மிகவும் விரும்புகிறேன். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மொபைல் போனில் அவரிடம் பேசி நலம் விசாரித்து அதை பற்றி நான் தெரிவித்தேன். அவர் காயத்தை சந்தித்த நேரம் மிகவும் அச்சுறுத்தலான நேரமாகும். அது அனைவரையும் பயமுறுத்தியது. எனவே தற்சமயத்தில் அவரை அமைதியாக தனியாக விடுங்கள். இருப்பினும் அவரை அறிந்த அனைவரும் அவரை மிகவும் நேசிக்கிறார்கள். மிகவும் இளம் வீரரான அவர் இன்னும் உலகை தனது காலடியில் வைத்திருக்க காத்திருக்கிறார். எனவே அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் தாமதமின்றி விளையாடுவதற்காக நாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அது மட்டும் ஏன் நடக்கலன்னு புரியல ஒரே மாயமா இருக்கு – ரோஹித் சர்மாவின் விமர்சனங்களுக்கு மஞ்ரேக்கர் பதிலடி

முன்னதாக மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்ளக் கூடிய குணத்தை கொண்ட ரிக்கி பாண்டிங்கிடம் டெல்லி அணியில் கடந்த சில வருடங்களாக பயிற்சியாக பணியாற்றும் போது ரிஷப் பண்ட் சில குறும்புத்தனமான சேட்டைகளை செய்ததை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. எனவே களமிறங்கி விளையாட விட்டாலும் அது போல அணியுடன் இருந்தாலே அதுவே தாம் உட்பட அனைத்து அணியினருக்கும் உற்சாகத்தை கொடுக்கும் என்று ரிக்கி பாண்டிங் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement