அது மட்டும் ஏன் நடக்கலன்னு புரியல ஒரே மாயமா இருக்கு – ரோஹித் சர்மாவின் விமர்சனங்களுக்கு மஞ்ரேக்கர் பதிலடி

Advertisement

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா ரசிகர்கள் கொண்டாடும் தனது ஹிட்மேன் என்ற பெயருக்கேற்றார் போல் அதிரடியாக ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். மேலும் கடந்த வருடம் சாதாரண இரு தரப்பு தொடர்களை வென்ற அவரால் ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை வென்று தர முடியவில்லை.

Rohit Sharma

அத்துடன் அடிக்கடி காயம் மற்றும் பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுப்பதால் வரலாற்றில் 7 வெவ்வேறு கேப்டன்கள் பயன்படுத்த வேண்டிய பரிதாபமும் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதனால் பேட்டிங் மற்றும் பிட்னெஸ் ஆகிய இரண்டிலுமே கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் கடந்த 50 இன்னிங்ஸ்களாக சதமடிக்காமல் தவித்து வருகிறார். இருப்பினும் 2019க்குப்பின் பெரும்பாலான போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி தடுமாறிய விராட் கோலி போல மோசமான ஃபார்மில் ரோகித் சர்மா இருப்பதாகவும் தெரியவில்லை.

- Advertisement -

மாயமா இருக்கு:
ஏனெனில் வங்கதேசத்துக்கு எதிராக கையில் காயத்துடன் கட்டு போட்டுக்கொண்டு அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடிய அவர் நடைபெற்று முடிந்த இலங்கை தொடரிலும் 80, 40 போன்ற நல்ல ரன்களை எடுத்தாலும் அதை சதமாக மட்டுமே மாற்ற முடியவில்லை. அதாவது அதிரடியாக நல்ல தொடக்கத்தை பெறும் அவர் அதை பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் மட்டுமே தடுமாறுகிறார். இருப்பினும் உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் அவர் விரைவில் சதமடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்ப வேண்டியது இந்திய அணியின் வெற்றிக்கு கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

Rohit Sharma 83

இந்நிலையில் 2019 – 2021 வரை சதமடிக்காமல் தடுமாறிய விராட் கோலி அளவுக்கு தடுமாறாமல் நல்ல தொடக்கத்தை பெற்றும் ரோகித் சர்மாவால் ஏன் சதத்தை மட்டும் அடிக்க முடியவில்லை என்பது தமக்கு புரியவில்லை என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இருப்பினும் நல்ல தொடக்கத்தை பெறும் ரோஹித் சர்மாவுக்கு விரைவில் சதம் தாமாகவே தேடி வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவருக்கு ஏன் பெரிய ஸ்கோர்கள் வரவில்லை என்பதற்கான காரணத்தை சொல்வதற்கு என்னிடம் எந்த ஐடியாவும் இல்லை. ஏனெனில் சிறப்பாக பேட்டிங் செய்யும் அவரிடம் தடுமாறுவதற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை. சொல்லப்போனால் கடந்த வருடங்களில் விராட் கோலி நாம் எதிர்பார்த்த பார்மில் இல்லாமல் தடுமாறியதை தெளிவாக பார்க்க முடிந்தது. ஆனால் ரோகித் சர்மா பந்தை தெளிவாக அடித்து இலங்கைக்கு எதிரான தொடரில் 30 – 40, 70 – 80 போன்ற ரன்களை எளிதாக எடுத்தார்”

Sanjay

“ஆனால் சதம் மட்டும் அவரை தேடி வர மறுக்கிறது. அதே சமயம் இந்தியா தொடர்ந்து 350 ரன்கள் அடிக்கும் வரை அவர் சதம் அடிக்கவில்லை என்றாலும் எனக்கும் பிரச்சனை இல்லை இந்திய அணிக்கும் பிரச்சனை இல்லை. இருப்பினும் அவரை நோக்கி விரைவில் ஒரு சதம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் ரோகித் சர்மா தடுமாறுவதற்கான எந்த அறிகுறிகளும் அவரது பேட்டிங்கில் இல்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட என்னுடைய வளர்ச்சிக்கு அவர் தான் காரணம் – இந்திய ஜாம்பவானை மனதார பாராட்டும் சுப்மன் கில்

அவர் கூறுவது போல ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்க்கும் போது மோசமான பார்மில் இருப்பதாக தோன்றவில்லை. ஏனெனில் அவர் வழக்கம் போல புல் ஷாட்களில் அசால்ட்டான சிக்சர்களை பறக்க விட்டு இந்தியாவுக்கும் பவர்பிளே ஓவர்களில் நல்ல தொடக்கத்தை கொடுக்கிறார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 29 சதங்களையும் 3 இரட்டை சதங்களையும் அசால்டாக அடித்துள்ள அவருக்கு எப்படி அது போன்ற நல்ல தொடக்கத்தை 3 இலக்க ரன்களாக மாற்ற வேண்டும் என சொல்லியும் தெரிய வேண்டியதில்லை. எனவே அவர் விரைவில் சதமடிப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement