ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட என்னுடைய வளர்ச்சிக்கு அவர் தான் காரணம் – இந்திய ஜாம்பவானை மனதார பாராட்டும் சுப்மன் கில்

Shubman-Gill
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்து 208 (149) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார யாதவ் உள்ளிட்ட இதர முக்கிய வீரர்கள் 40 ரன்கள் கூட தொடாத நிலையில் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி ஓவர் வரை வெளுத்து வாங்கிய அவர் 19 பவுண்டரி 9 சிக்சருடன் தனி ஒருவனாக 208 ரன்கள் விளாசி தனது தரத்தை நிரூபித்தார்.

அதிலும் குறிப்பாக 182 ரன்கள் இருந்த போது சிங்கிள், டபுள் எடுக்காமல் நியூசிலாந்தின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் லாக்கி பெர்குசன் வீசிய 48வது ஓவரில் அடுத்தடுத்த 3 சிக்சர்களை பறக்க விட்டு ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் இரட்டை சதத்தை நெருங்கியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. முன்னதாக கடந்த 2018 அண்டர்-19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று வெற்றியில் முக்கிய பங்காற்றி இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சுப்மன் கில் ஆரம்பத்தில் சுமாரான செயல்பாடுகள் மற்றும் காயத்தால் இடத்தை தக்க வைத்துக் கொள்ள தவறினார்.

- Advertisement -

வெற்றிக்கு பின்னால்:
அதற்கிடையே 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் எடுத்திருந்த அவர் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அப்போது முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று கடந்த மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்த அவர் தற்போது இரட்டை சதத்தையும் விளாசி இந்திய அணியில் தனக்கென்று ஒரு இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் 2022இல் துவங்கிய தன்னுடைய எழுச்சிக்கு முன்னாள் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங் மற்றும் தனது தந்தை 2020 லாக் டவுன் சமயங்களில் தனக்கு பயிற்சிகளை கொடுத்து குருவாக செயல்பட்டதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் போட்டிக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருமுறை இங்கிலாந்தில் நான் விளையாடிய போது பயிற்சி போட்டியில் 7 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்திருந்தேன். அதை இப்போட்டியில் செய்ய முயற்சித்த போது எதிர்ப்புறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் விழுந்தது. அதனால் நிலைத்து நின்று பேட்டிங் செய்யுமாறு எனக்கு அணி நிர்வாகத்திடமிருந்து மெசேஜ் வந்தது”

- Advertisement -

“அதனால் தான் நான் சற்று மெதுவாக விளையாடினேன். ஏனெனில் நான் அவுட்டாகி விட்டால் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் அதிரடியாக கடைசி நேரத்தில் பவுண்டரிகளை அடிக்க முடியாது. அதனால் கடைசி 5 ஓவரில் அதிரடி துவக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் 44வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் அவுட்டானார். அதனால் கடைசி 3 ஓவரில் அதிரடியை துவக்கமாறு மீண்டும் அணி நிர்வாகத்திடமிருந்து மெசேஜ் வந்தது. ஆனால் 46, 47வது ஓவரிலேயே ஒரு சில சிக்சர்களை அடித்ததும் இனிமேலும் பொறுமை வேண்டாம் என்று பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டேன்”

“இதற்கு யுவி பாஜி எனக்கு ஆலோசகராகவும் மூத்த அண்ணனாகவும் இருந்து உதவி செய்துள்ளார். அவர் லாக் டவுன் இருந்த போதும் அதன் பின்பும் என்னுடன் இருந்து எனது பேட்டிங்கில் நிறைய முன்னேற்றங்கள் செய்வதற்கு உதவினார். அதே போல் கிரிக்கெட் விளையாட துவங்கியதில் இருந்து என்னுடைய தந்தை என்னுடைய முதன்மை பயிற்சியாளர் ஆவார். இன்று யுவியை பெருமையடைய வைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs NZ : இந்திய அணிக்கு அபராதம் விதித்த மைதான நடுவர். தவறை ஒப்புக்கொண்ட ரோஹித் – என்ன நடந்தது?

அப்படி தன்னுடைய பயிற்சியில் இரட்டை சதமடித்த சுப்மன் கில் பற்றி யுவராஜ் சிங் ட்விட்டரில் பாராட்டியது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டில் 200 அதுவும் இந்த இளம் வயதில் அடித்துள்ளது நம்ப முடியாதது அபாரமானது. எனக்கும் சுப்மன் கில் தந்தைக்கும் என்று மிகவும் பெருமையான நாள். மொத்த நாடும் பெருமை கொள்கிறது” என்று பாராட்டினார்.

Advertisement