IND vs NZ : இந்திய அணிக்கு அபராதம் விதித்த மைதான நடுவர். தவறை ஒப்புக்கொண்ட ரோஹித் – என்ன நடந்தது?

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 18-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 12 வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Shardul Thakur 1

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் நியூசிலாந்து அணியும் களமிறங்கவுள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்நிலையில் முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி வீரர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து 60% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Siraj 2

அதன்படி களத்தில் இருந்த நடுவர்களின் குற்றச்சாட்டு யாதெனில் : இந்திய அணி பந்து வீச போதிய நேரத்தை விட கூடுதலாக நேரத்தை எடுத்துக் கொண்டது. கணக்கிடப்பட்ட நேரத்தை விட மூன்று ஓவர்கள் இந்திய அணி தாமதமாக பந்து வீசியதால் ஒரு ஓவருக்கு 20% என மொத்தம் 60 சதவீத அபராதம் அனைத்து வீரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவிற்கு அடுத்து இவர்தான் இந்திய அணியின் கேப்டன் – பி.சி.சி.ஐ தரப்பில் வெளியான தகவல்

இந்த தவறினை இந்திய ஆனியன் கேப்டன் ரோகித் சர்மாவும் ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அபராத தொகையை செலுத்துவதாக ரோகித் சர்மா ஒப்புக் கொண்டதால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததுள்ளது.

Advertisement