ரோஹித் சர்மாவிற்கு அடுத்து இவர்தான் இந்திய அணியின் கேப்டன் – பி.சி.சி.ஐ தரப்பில் வெளியான தகவல்

Rohith
- Advertisement -

விராட் கோலிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோஹித் சர்மா இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி வந்தாலும் அவரது தலைமையிலும் இந்திய அணி ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியாதது அவர் மீது ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் தோனிக்கு பிறகு யாரும் ஐசிசி தொடரை கைப்பற்ற வில்லை என்கிற ஒரு பேச்சு இருந்து வரும் வேளையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் ஐசிசி தொடர்களில் பங்கேற்று கோப்பையை தவறவிட்டது.

Rohith

- Advertisement -

அதனை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அவரது தலைமையில் ஐசிசி கோப்பைகளை இந்திய அணியால் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி ரோகித் சர்மாவின் தலைமையிலேயே செயல்பட இருக்கிறது.

அதே வேளையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு டி20 போட்டிகளில் இந்திய சீனியர் வீரர்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களைக் கொண்ட அணியே பாண்டியாவின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான கேப்டனாக ஹார்டிக் பாண்டியாவே செயல்படுவார் என்பது இந்த செயல்களின் மூலம் தெளிவாகியுள்ளது. இதன் காரணமாக ரோகித் சர்மா இனி டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Hardik-Pandya

அதே வேளையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்பட போகிறார்கள் என்பது குறித்த கேள்வியும் தற்போதைய எழுந்துள்ளது. அந்த வகையில் பெயர் குறிப்பிடப்படாத பிசிசிஐ-யின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் : தற்போதைய கட்டத்தில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக அடுத்த கேப்டனுக்கான தேடல் இந்திய அணியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தான் இந்திய அணியில் அவ்வப்போது சில மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மாவிற்கு அடுத்து கேப்டனாக ஹார்டிக் பாண்டியா தான் இருப்பார் ஏனெனில் அவரது தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு கேப்டனாக பாண்டியாவும் அணியை சரியாக வழி நடத்தி வருகிறார். எனவே ரோகித்துக்கு அப்புறம் பாண்டியாவை தவிர வேறு ஒரு ஆப்ஷன் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை.

இதையும் படிங்க : யார் சொல்றதையும் கேக்காதீங்க. அதெல்லாம் முக்கியமில்லை – ரோஹித்துக்கு இர்பான் பதான் அறிவுரை

எனவே பாண்டியா தான் அடுத்த கேப்டனாக வாய்ப்பு அதிகம் என அந்த பெயர் குறிப்பிடப்படாத பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மூத்த வீரர்களை அணியிலிருந்து நீக்கிவிட்டு இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சுக்கள் இருந்து வரும் வேளையில் தற்போது அடுத்த கேப்டனாக பாண்டியா மாறவுள்ள செய்தி அதிகளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement