யார் சொல்றதையும் கேக்காதீங்க. அதெல்லாம் முக்கியமில்லை – ரோஹித்துக்கு இர்பான் பதான் அறிவுரை

Irfan-pathan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றோடு வெளியேறியதை அடுத்து ஐசிசி தொடர்களை கைப்பற்ற முடியவில்லை என்ற ஒரு குறை இந்திய அணியின் மீது இருந்து வருகிறது. அதனை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கணக்கில் கொண்டு தற்போது இந்திய அணி அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.

Siraj

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடரை முடித்துக் கொண்ட இந்திய அணி அடுத்ததாக தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடர்களில் பல்வேறு வீரர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் சதம் அடிக்காமல் இருந்து வருவது அவரது மீது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டிற்கு பிறகு சதம் அடிக்காமல் இருந்து வரும் ரோகித் சர்மா மீது தற்போது அதிக அளவு பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஏனெனில் விராட் கோலி சதம் அடிக்காத போது அவர் மீது அழுத்தம் எழுந்த வேளையில் தற்போது விராட் கோலி அடுத்தடுத்த சதங்களை அடித்து தன் மீதுள்ள விமர்சனங்களுக்கு தனது பேட்டின் மூலம் பதில் அளித்தார். அதனை தொடர்ந்து தற்போது ரோஹித் மீதும் அந்த சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.

Shubman and Rohit

மேலும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் எந்த ஒரு தொடரிலும் அவரால் பெரிய அளவில் விளையாடி சதம் அடிக்க முடியாமல் செல்கிறது. எனவே அவரது இடத்திற்கான பரிசோதனையை இந்திய அணி மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியில் ரோகித் சர்மாவின் இடம் மிக முக்கியமானது அவர் எதையும் மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ரோகித் சர்மா தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஒவ்வொரு ஷாட்டும் மிகச் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக கவர் திசையில் விளையாடும் ஷாட்களும், ஃபுல் ஷாட்டுகளும் அவருடைய பேட்டிங் யுக்திகளாக இருக்கின்றன. ரோகித் சர்மா தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் அனைவரும் அவர் ஆட்டம் இழந்து வெளியேறும் அந்த ஒரு பந்தை மட்டுமே யோசித்து பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க : இவர் தான் இந்தியாவின் எதிர்காலம், சுப்மன் கில் பற்றி 2 வருடத்துக்கு முன்பே கணித்த ரோஹித் சர்மா – வைரல் பதிவு

நான் ரோகித் சர்மா ஃபார்ம் அவுட் ஆனதாக கருதவில்லை. ஏனெனில் ரோகித் சர்மாவை பொறுத்தவரை இது போன்ற பேச்சுகளை எல்லாம் கவலைப்பட தேவையில்லை. அவர் நிச்சயம் ஒரு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டால் அவரது பார்ம் கண்டிப்பாக தொடரும் என்பதால் எந்த ஒரு பேச்சுகளையும் ஏற்றுக் கொள்ளாமல் ரோகித் அவரது பாணியில் சென்றால் நிச்சயம் அது இந்திய அணிக்கு பலம் தான் என இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement